Public Holiday: வார விடுமுறையில் வரும் பண்டிகைகள்.. 2025 ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள் இதோ!
2025 calender: ஜனவரி தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான பண்டிகைக்கால பொது விடுமுறை நாட்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 24 நாட்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம். இதில் பல பண்டிகை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் சோகம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு அமைந்துள்ளது.
விடுமுறை நாட்கள்: 2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான பண்டிகைக்கால பொது விடுமுறை நாட்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 24 நாட்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
ஜனவரி
- 01.01.2025 – புதன்கிழமை – ஆங்கிலப்புத்தாண்டு
- 14.01.2025 – செவ்வாய்கிழமை – தைப்பொங்கல்
- 15.01.2025 – புதன்கிழமை – மாட்டுப்பொங்கல்
- 16.01.2025 – வியாழக்கிழமை – திருவள்ளுவர் தினம்
- 26.01.2025 – ஞாயிற்றுக்கிழமை – குடியரசுத்தினம்
பிப்ரவரி
- 11.02.2025 – செவ்வாய்க்கிழமை – தைப்பூசம்
மார்ச்
- 30.03.2025 – ஞாயிற்றுக்கிழமை – தெலுங்கு வருடப்பிறப்பு
- 31.03.2025 – திங்கட்கிழமை – ரம்ஜான்
ஏப்ரல்
- 01.04.2025 – செவ்வாய்கிழமை – வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
- 10.04.2025 – வியாழக்கிழமை- மகாவீரர் ஜெயந்தி
- 14.04.2025 – திங்கட்கிழமை – தமிழ் வருடப்பிறப்பு / அம்பேத்கர் பிறந்த தினம்
- 18.04.2025 – வெள்ளிக்கிழமை – புனித வெள்ளி
மே
- 01.05.2025 – வியாழக்கிழமை – மே தினம்
ஜூன்
- 07.06.2025 – சனிக்கிழமை – பக்ரீத் பண்டிகை
Also Read: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்… வாட்ஸ் அப் மூலம் உதவிகள்!
ஜூலை
- 06.07.2025 – ஞாயிற்றுக்கிழமை – மொஹரம் பண்டிகை
ஆகஸ்ட்
- 15.08.2025 – வெள்ளிக்கிழமை – சுதந்திர தினம்
- 16.08.2025 – சனிக்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி
- 27.08.2025 – புதன் கிழமை – விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர்
- 06.09.2025 – வெள்ளிக்கிழமை – மிலாடி நபி
அக்டோபர்
- 01.10.2025 – புதன்கிழமை – ஆயுதபூஜை
- 02.10.2025 – வியாழக்கிழமை – விஜயதசமி
- 02.10.2025 – வியாழக்கிழமை – காந்தி ஜெயந்தி
- 20.10.2025 – திங்கட்கிழமை – தீபாவளி பண்டிகை
டிசம்பர்
- 25.12.2025 – வியாழக்கிழமை – கிறிஸ்துமஸ் பண்டிகை
சோதனை மேல் சோதனை
2025 ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடியரசு தினம், தெலுங்கு வருட பிறப்பு, முகரம் பண்டிகை, கிருஷ்ண ஜெயந்தி, பக்ரீத் பண்டிகை, ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் பலரும் சோகமடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் காந்தி ஜெயந்தி அன்று விஜயதசமி விடுமுறையும் இணைந்து வருவதால் ஒரு விடுமுறை ரத்தாகியுள்ளது. மேலும் சுதந்திர தினத்திற்கு மறுநாள் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால் வாரம் விடுமுறையில் அந்த அரசு விடுமுறை கழிந்து விடும்.
மிகச்சிறந்த விடுமுறை வாரம்
ஆனால் 2025 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த விடுமுறை வாரமாக பொங்கல் விடுமுறை வருகிறது. ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் விடுமுறை தொடங்குகிறது. 15 மற்றும் 16 ஆம் தேதிகள், அதாவது புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையும் அரசு விடுமுறையாகும். சரியாகப் பார்த்தோமேயானால் பலருக்கும் ஜனவரி 10 ஆம் தேதி மாலை நேரத்திலேயே விடுமுறை தொடங்கி விடும். காரணம் 11 ஆம் தேதி சனிக்கிழமை, 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வார விடுமுறையில் கழிந்து விடும்.
அதே சமயம் 13-ஆம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலை நாளாகும். அதிலிருந்து 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மறுபடியும் ஜனவரி 17 ஆம் தேதியான வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாகும். சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறைகள் வந்துவிடும். இதனால் ஜனவரி 13 மற்றும் ஜனவரி 17 ஆகிய இரண்டு தேதிகளும் தமிழக அரசு சிறப்பு விடுமுறைகள் விடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினரிடம் பண்டிகை ஜோராக கொண்டாடும் வகையில் 2025 ஆம் ஆண்டு காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது சற்றே மனமகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 10 மற்றும் 14 ஆம் தேதி அரசு விடுமுறையாகும். இதற்கு நடுவில் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. சனிக்கிழமை எல்லா வாரமும் விடுமுறை இருக்காது என்றாலும் சூழலை கருத்தில் கொண்டு விடுமுறை விட அதிக வாய்ப்புள்ளது. அதேசமயம் தேர்வுகள், உள்ளூர் விடுமுறை ஆகியவை விடப்பட்டால் சனிக்கிழமை பணிநாளாக இருக்கும் என்பதால் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் 12 மாதங்களில் நவம்பரில் மட்டும் எந்த விடுமுறையும் வராத வரலாறும் உள்ளது.