Today’s Top News Headlines: சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்.. இன்றைய முக்கியச் செய்திகள்.. - Tamil News | todays-headlines-september-14-2024-tamilnadu-india-world-know-more-details-in-tamil | TV9 Tamil

Today’s Top News Headlines: சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்.. இன்றைய முக்கியச் செய்திகள்..

Published: 

14 Sep 2024 07:13 AM

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்

Follow Us On

முக்கியச் செய்திகள்: நேற்று முதல் தற்போது வரை உங்களைச் சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மீண்டும் சென்னை திரும்புகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு:

  • 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மீண்டும் சென்னை திரும்புகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
  • தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (செப்டம்பர் 14) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
  • அண்ணப்பூர்னா உணவக உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானதை தொடர்ந்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  •  சிவகங்கை அருகே குன்றக்குடி கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கோயில் யானை பரிதாபமாக உயரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
  • திமுக அரசையும், விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
  • குரூப் 2 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முதலமைச்சர் ஸ்டாலின்னி கோரிக்கையை ஏற்று சென்னையில் போர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிகாகோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • அன்னபூர்ணா நிறுவனரை மிரட்டி பணிய வைத்து மன்னிப்பு கேட்டு வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Also Read: “ஜிலேபியும் சாப்பிடல.. சண்டையும் போடல” வானதி சீனிவாசன் விளக்கம்!

இந்தியா:

  • டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 6 மாதம் சிறையில் இருந்த நிலையில் நேற்று வெளியே வந்துள்ளார்.
  • ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
  • வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • ஆந்திராவில் லாரிகள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
  • மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
  • ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவதிக்கப்பட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உலகம்:

  • சீனாவில் அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும் வயதை 78 ஆக அதிகரித்து அந்நாட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • குரங்கு அம்பை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான முதல் அங்கீகாரத்தை உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டொனால்டு டிரம்ப்புடன் மற்றொரு விவாதம் நடத்த தயாராக இருப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
  • வியட்நாமில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 226ஆக உயர்ந்துள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: “கடவுள் இருக்கான்” கொட்டும் மழையில் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் உருக்கம்!

விளையாட்டு:

  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
  • இந்திய அணியுடன் புதிய பந்து வீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வேகபந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் வீரரான அபிஷேக் நாயரும் இணைந்துள்ளனர்.
  • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது 5வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மதியம் 1.15 மணிக்கு மோதுகிறது. ஏற்கனவே, சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தியது.

நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
Exit mobile version