5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Party: “மாநாடு கூட்டிச் சென்றதற்கு பணம் தரவில்லை” – த.வெ.க. நிர்வாகி மீது வேன் ஓட்டுநர்கள் புகார்!

Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒரு மாதமாக அதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில் கிட்டதட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

TVK Party: “மாநாடு கூட்டிச் சென்றதற்கு பணம் தரவில்லை” – த.வெ.க. நிர்வாகி மீது வேன் ஓட்டுநர்கள் புகார்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 06 Nov 2024 13:02 PM

தமிழக வெற்றிக் கழகம்: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேன் ஓட்டுநர்கள் இருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சம்பவம் ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தன்னுடைய இலக்காக கொண்டு விஜய் செயல்பட்டு வருகிறார்.  இதனைத் தொடர்ந்து கட்சியின்  செயல்பாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்து வருகிறது. நிர்வாகிகள் மட்டுமல்லாமல் பல துறைகள் ரீதியான பிரிவுகளையும் கட்சியில் அமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

Also Read: Crime: 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – புதுச்சேரியில் 4 பேர் கைது!

தமிழக வெற்றிக் கழக மாநாடு

அடுத்த சில நாட்களில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒரு மாதமாக அதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில் கிட்டதட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த மாநாட்டில் விஜய்யின் முதல் அரசியல் பேச்சு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பலைகளை பெற்றது. குறிப்பாக பெயர் குறிப்பிடாமல் பாஜக மற்றும் திமுகவை தனது கொள்ளை ரீதியாகவும்,  அரசியல் ரீதியாகவும் எதிரி என வெளிப்படையாகவே அறிவித்தார் விஜய். இப்படியான நிலையில் இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும்  தொண்டர்கள் வேன், பேருந்து, கார், ரயில் என அனைத்து வாகன போக்குவரத்து வசதிகள் மூலமும் வந்து சென்றனர்.

நிர்வாகிகள் மீது புகார்

இதனிடையே தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர்கள் இருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் மீது பரபரப்பு புகாரை அளித்துள்ளனர். அதில் சென்னையைச் சேர்ந்த சக்திவேல், மணிகண்டன் ஆகிய இருவராகிய நாங்கள் ஆக்டிவ் ஓட்டுனர்களாக செயல்பட்டு வருகிறோம். சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் அபிராமிபுரம் பகுதி துணைச் செயலாளராக உள்ள மோகன் என்பவர் எங்களை தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் செல்ல வேண்டும். ஆக்டிங் ஓட்டுநர்களாக வர வேண்டும் என அணுகினர்.

Also Read: CM Stalin: 2026ல் மீண்டும் திமுக ஆட்சி தான்.. முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை!

நாங்களும் அதற்கு சம்மதித்த நிலையில் மோகன் சம்பளத் தொகை பேசிவிட்டு சென்றார். இதனையடுத்து அக்டோபர் 27ஆம் தேதி தொண்டர்களை அழைத்துக் கொண்டு மாநாட்டிற்கு சென்றோம். போகும் வழியிலேயே வாகனத்தில் தொண்டர்கள் மது குடித்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல், பெரிதுபடுத்தாமல் நாங்கள் அவர்களை மாநாட்டில் இறக்கி விட்டோம்.

ஆனால் நிர்வாகி மோகன் கூறியது போல எங்களுக்கு சாப்பாடு எதுவும் வாங்கித் தரவில்லை. மாநாடு முடிந்து அனைவரையும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்த நிலையில் மோகன் தான் கூறியபடி சம்பளத் தொகையை எங்களுக்கு தரவில்லை. பணம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் ஆட்களை வைத்து தாக்க முயன்றார். அது மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த மற்றொரு நிர்வாகியான சுதாகர் என்பவர் எங்களை ஆபாசமாக திட்டி அங்கிருந்து விரட்டி விட்டார்.

இதுகுறித்து அபிராமிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழக கட்சி கழகத்தின் நிர்வாகிகள் மோகன் மற்றும் சுதாகர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் மீது அனைவரின் எண்ணமும் திரும்பியுள்ள நிலையில் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News