Ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள் – என்ன நடந்தது?

Villupuram: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி கேட்டு விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலையில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்ற அமைச்சர் பொன்முடி சென்றார்.

Ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள் - என்ன நடந்தது?

அமைச்சர் பொன்முடி

Updated On: 

03 Dec 2024 16:04 PM

அமைச்சர் பொன்முடி: விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி கேட்டு விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலையில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இப்படியான நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் தமிழ்நாடு அரசு சார்பில் அந்த தொகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு துறை அதிகாரிகள் என பலரும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் அடிப்படை உதவிகள் கேட்டு அங்கு வசிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணையை திறந்து விட்டது ஏன் எனவும், அதனால் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியதாகவும் கூறி தமிழ்நாடு அரசையும், அதிகாரிகளையும் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார்.

அப்போது அவர் காரில் அமர்ந்தபடியே குறையை கேட்டார். இதனால் மேலும் அதிருப்தி அடைந்த பொது மக்களில் சிலர் நீங்கள் காரில் இருந்து இறங்க மாட்டீர்களா என கேட்டு அவர் மீது சேற்றை வீசினர். இதனைத் தொடர்ந்து உங்களுக்கு தேவையானதை தமிழக அரசு செய்து தரும் என காரை விட்டு கீழே இறங்கி அமைச்சர் பொன்முடி கூறிவிட்டு அங்கிருந்து விழுப்புரம் திரும்பினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி மக்களோடு பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: TN Weather Report : 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

விழுப்புரம் மாவட்டத்தின் நிலை என்ன?

ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி கரையை கடந்தாலும் அதன் தாக்கம் பல மடங்கு இருந்தது. குறிப்பாக விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மட்டும் ஒரு நாளில் அதிகபட்சமாக 51 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மேலும் அரக்கோணம் திண்டிவனம் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. அது மட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் பாய்ந்ததால் நேற்று கிட்டத்தட்ட 10 மணி நேரம் சாலைப் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.

திருக்கோவிலூர் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனைத்தும் இயக்கப்பட்டது. அங்குள்ள ரயில்வே பாலம் அடியில் செல்லும் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் பல ரயில்கள் மாற்று பாதையில் காட்பாடி வழியாக சென்னைக்குள் சென்றது. சில ரயில்கள் பகுதி நேரமாகவும், பகல் நேரல்கள் முழு நேரமாகவும் ரத்து செய்யப்பட்டது.

வீடுகள், கடைகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதிலிருந்து நள்ளிரவு முதல்  2.40 லட்சம் கன அடி நீர் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.

Also Read: Flood Relief : 6 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம்.. முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய 6  மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்ட முன்னுரிமையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெற்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம், எருது பசு போன்ற கால்நடைகளுக்கு ரூ.37, 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம்,  கோழிக்கு ரூ.100 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இரண்டு நாட்களுக்கு மேல் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து வாழ்வாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories
உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?