Virudhunagar Election Results 2024 : மாணிக்கம் தாகூர் வெற்றி.. விருதுநகர் மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!

விருதுநகர் மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமாரின் மனைவியுமான நடிகை ராதிகாவும், அதிமுக சார்பில், மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும், திமுக - காங்கிரஸ் சார்பில், விருதுநகர் தொகுதியில் ஏற்கனவே 2 முறை வெற்றி கண்ட மாணிக்கம் தாகூர் போட்டியிட்டனர். இதில், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர்  3 லட்சத்து 79 ஆயிரத்து 305 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்ததாக, தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,74,511 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

Virudhunagar Election Results 2024 : மாணிக்கம் தாகூர் வெற்றி.. விருதுநகர் மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!

விருதுநகர் மக்களவைத் தேர்தல் முடிவுகள்

Updated On: 

04 Jun 2024 20:15 PM

விருதுநகரில் காங்கிரஸ் வெற்றி: 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமாரின் மனைவியுமான நடிகை ராதிகாவும், அதிமுக சார்பில், மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும், திமுக – காங்கிரஸ் சார்பில், விருதுநகர் தொகுதியில் ஏற்கனவே 2 முறை வெற்றி கண்ட மாணிக்கம் தாகூர் போட்டியிட்டனர். இதில், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர்  3 லட்சத்து 79 ஆயிரத்து 305 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்ததாக, தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,74,511 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.  இங்கு காங்கிரஸின் மாணிக்கம் தாக்கூரும், தேமுதிகவின் விஜயபிரபாகரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.  ஒரு கட்டத்தில் விஜயபிரபாகரன் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனை அடுத்து,  4,794 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். மேலும், பாஜகவின் ராதிகா 1,62,256 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்தார். நாம் தமிழர் கட்சியன் கௌஷிக் என்பவருக்கு 75,324 வாக்குகள் கிடைத்தது.

விருதுநகர் தொகுதி :

விருதுநகர் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 34-வது தொகுதியாக உள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த விருதுநகரில், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆர் 1977ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, விருதுநகர் மக்களவை தொகுதி மீண்டும் நட்சத்திர வேட்பாளர் தொகுதியாக மாறியுள்ளது. இத்தொகுதியில், நடிகையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் வேட்பாளராக களம் கண்டார். அவரைத் தொடர்ந்து, மறைந்த தேமுதிக தலைவரான விஜயகுமாரின் மகன் விஜய பிரபாகரன், இந்த தொகுதியில், ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் பாஜக வெற்றிபெறும் என்று கூறப்படும் நிலையில், வரும் ஜூன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

விருதுநகர் தொகுதியின் தற்போதைய நிலை:

மிகவும் வறட்சியான மாவட்டம் என்பதால் இங்கு விவசாயம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பட்டாசு தொழிலையே நம்பியிருக்கின்றனர். பட்டாசு, தீப்பெட்டி, பிரிண்டிங், நூற்பு ஆலைகள் என முக்கிய தொழில்கள் நடைபெறும் விருதுநகரும், சிவகாசியும் இந்த தொகுதியில் தான் அடங்கியுள்ளது. இந்த தொழில்களை சார்ந்து தான் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் உள்ளது.

Also Read: Loksabha Election: நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்… 57 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

சட்டப்பேரவை தொகுதிகள்:

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பு இது சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தபோது, 1961 முதல் 2004 வரையில் 11 மக்களவைத் தேர்தல்களையும், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் 2009, 2014, 2019 என மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 2009, 2019 ஆகிய இருமுறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

Also Read: West Bengal Election Exit Poll 2024: மேற்கு வங்கம் கருத்துக்கணிப்பு முடிவு என்ன? தகர்கிறதா மம்தா கோட்டை?

வாக்காளர்களின் எண்ணிக்கை

விருதுநகர் தொகுதியில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 14,91,695

ஆண்கள்- 7,28,158

பெண்கள்- 7,63,335

3-ஆம் பாலினத்தவர்- 202

 

 

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!