TTFVaasan: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட யூடியூபர் TTF வாசன் கைது..! - Tamil News | YouTuber TTF Vaasan arrested for traffic violations..! | TV9 Tamil

TTFVaasan: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட யூடியூபர் TTF வாசன் கைது..!

Updated On: 

30 May 2024 07:52 AM

மதுரையில் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட யூடியூபர் TTF வாசன் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TTFVaasan: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட யூடியூபர் TTF வாசன் கைது..!

TTF வாசன்

Follow Us On

யூடியூபர் டிடிஎப் வாசன், பைக்கை வேகமாக ஓட்டி இளைஞர்களிடம் பிரபலமானார். தற்போது ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று தனது பைக்கில் ‘வீலீங்’ செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் டிடிஎப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த டிடிஎப் வாசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read:விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ டீசர் இதோ!

பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட போதிலும் தலைகவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால் அவர் உயிர் தப்பினார்.  அவருக்கு கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார், டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், டிடிஎப் வாசன் வாசனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய தமிழ்நாடு வட்டார போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்த நிலையில்,10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதால் டிடிஎஃப் வாசனை மதுரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சிறைக்கு சென்று திரும்பிய பிரபல யூடியூபர் டிடி எஃப் வாசன் சென்னை அயப்பாக்கத்தில் இருச்சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனையகம் நடத்தி வந்த நிலையில் அவரது கடையில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்கள் விற்பனை செய்யப்படுவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.

Also Read: Lok Sabha Election 2024 Result date: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஜூன் 4ம் தேதி.. வெற்றி யாருக்கு?

புகாரின் அடிப்படையில், டிடி எஃப் வாசன் கடைக்கு சென்று ஆய்வு செய்த போலீசார், அங்கு விலை உயர்ந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்களை விற்பனை தடை விதித்து நோட்டீஸ் வழங்கினர். இந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் மதுரையில் அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக அவர் மீது அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி செல்லுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version