Elon Musk: அந்த விஷயத்தில் இந்தியா சூப்பர்! – எலான் மஸ்க் சொல்வது எது தெரியுமா?
டொனால்ட் ட்ரம்ப் வெற்றிக்கு தொழிலதிபர் எலான் மாஸ்க் மிகப்பெரிய அளவில் சப்போர்ட் செய்து இருந்தார். குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய அளவில் நிதியை வாரி வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவுடன் டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்கிற்கு அமெரிக்க் அரசின் செயல் திறன் துறையின் தலைமை பதவி கொடுக்கப்பட்டது.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையை வெகுவாக பாராட்டியுள்ளார். கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மகத்தான வெற்றி பெற்று அடுத்த அதிபராக 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இப்படியான நிலையில் 50 மாகாணங்களை கொண்ட அமெரிக்காவில் கலிபோர்னியா தவிர்த்து மற்ற மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து விட்டது. தேர்தல் முடிந்து 2 வாரங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் 3 லட்சம் வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
India counted 640 million votes in 1 day.
California is still counting votes 🤦♂️ https://t.co/ai8JmWxas6
— Elon Musk (@elonmusk) November 24, 2024
இந்நிலையில் தான் 64 கோடி வாக்குகளை கொண்ட இந்தியாவில் ஒரே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதாக பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் கலிபோர்னியா இன்னும் வாக்குகளை எண்ணிக் கொண்டிருக்கிறது என எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார். அமெரிக்காவின் கிட்டத்தட்ட 39 மில்லியன் மக்கள் வசிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான கலிஃபோர்னியா திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குகளை எண்ணுவதில் ஏற்படும் தாமதங்களுக்குப் பெயர் பெற்றதாக திகழ்கிறது. நவம்பர் 5 தேர்தல் நடந்த நிலையில் உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டது. சுமார் 16 மில்லியன் வாக்காளர்களைக் கொண்டிருந்த கலிபோர்னியா மாநிலம் 3 லட்சம் வாக்குகளை எண்ணி முடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அங்கு தபால் வாக்குகள் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: IPL Auction 2025: ரூ. 641 கோடி.. 577 வீரர்கள்.. ஐபிஎல் ஏலம் எப்போது தொடக்கம்? முழு விவரம் இங்கே!
அமெரிக்கா அதிபர் தேர்தல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதனை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் ட்ரம்ப் வெற்றி பெற்றது அனைவருக்குமே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து தற்போதைய அதிபரான ஜோ வைடனை வெள்ளை மாளிகையில் வைத்து டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார். இப்படியான நிலையில் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற விதி உள்ளது. ட்ரம்ப் ஏற்கனவே கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்து வந்தார். இப்படியான நிலையில் 2028 தேர்தலில் போட்டியிருவது தொடர்பாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசியது பரபரப்பை கிளப்பியிருந்தது.
Also Read: Crime: ஜீன்ஸ் பேண்டை தைத்த வீடியோ வைரல்.. தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!
ஒருவேளை ட்ரம்ப் மூன்றாவது முறையாக அதிபர் பதவியை ஏற்க விரும்பினால் முதலில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபையிலும், செனட் சபையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். அதேபோல் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் குறைந்தது 38 மாநிலங்களாவது இந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வளவு கடினமான நடைமுறைகள் காரணமாக கண்டிப்பாக அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்வது கடினமான செயல் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டொனால்ட் ட்ரம்ப் வெற்றிக்கு தொழிலதிபர் எலான் மாஸ்க் மிகப்பெரிய அளவில் சப்போர்ட் செய்து இருந்தார். குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய அளவில் நிதியை வாரி வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவுடன் டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்கிற்கு அமெரிக்க் அரசின் செயல் திறன் துறையின் தலைமை பதவி கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அரசின் செலவினத்தில் மிகப்பெரிய அளவில் நடக்கும் நவீன் செலவுகளையும் முறைகேடுகளையும் தடுக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இதே பொறுப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.