North Korea: தென்கொரியாவை பழிவாங்க குப்பைகளை கொட்டி பதிலடி கொடுத்த வடகொரியா..! - Tamil News | | TV9 Tamil

North Korea: தென்கொரியாவை பழிவாங்க குப்பைகளை கொட்டி பதிலடி கொடுத்த வடகொரியா..!

Updated On: 

16 Jun 2024 10:21 AM

South Korea: அனு ஆயுத தயாரிப்பில் உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வட கொரியா அடிக்கடி அணு ஆயுதங்களை ஏவி சோதனை செய்து வருகிறது. வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வரும் நிலையில், வட கொரியா கடந்த வாரம் ஏவிய உளவு செயற்கைகோள் தோல்வி அடைந்த நிலையில், வடகொரியா குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்களை தென்கொரியாவிற்கு அனுப்பியுள்ளதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

North Korea: தென்கொரியாவை பழிவாங்க குப்பைகளை கொட்டி பதிலடி கொடுத்த வடகொரியா..!

வடகொரியா

Follow Us On

வட கொரியா கடந்த வாரம் ஏவிய உளவு செயற்கைகோள் தோல்வி அடைந்தது. மேலும், குறுகிய துார ஏவுகணைகளை சோதித்து பார்த்தது. இந்த சம்பவங்களை கண்டித்து வட கொரிய எல்லை பகுதியில் தென் கொரிய நாட்டினர் துண்டு பிரசுரங்களை வீசி விட்டு சென்றுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குப்பைகளை சுமந்து செல்லும் பலுான்களை தென் கொரியா மீது வட கொரியா ஏவி பழிவாங்கியுள்ளது.

Also Read: Tamilnadu Loksabha Results: பிரதமராகிறீர்களா? கருணாநிதி ஸ்டைலில் பதில் அளித்த ஸ்டாலின்!

கடந்த சில நாட்களாக ராட்சத பலூன்கள் மூலமாக முழுக்க குப்பைகளை கட்டி, அந்த குப்பைகளை, தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. இருநாட்டு எல்லையிலும், ஏராளமான பலூன்கள் பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பலூன்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், ஷூ, சாணம், சிகரெட் துண்டுகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த பொருட்களும் இல்லை என்றும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி இரவு 8 மணி முதல் மறுநாள் 1 மணி வரையிலும், தலைநகர் சியோலில் 700க்கும் மேற்பட்ட குப்பைப் பலூன்களை வடகொரியா பறக்கவிட்டதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

Also Read: ஐஸ்வர்யா ராயின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு இதுதான் காரணமா?

வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது என்றும் மிகவும் தரம்தாழ்ந்த ஒன்று என தென்கொரியா தெரிவித்தது. மேலும், வடகொரியாவின் இந்த செயலை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தியது. இந்த நிலையில், வடகொரியா துணை பாதுகாப்பு துறை அமைச்சர் கிம் காங் II, “எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம். குப்பைகளை சுத்தம் செய்ய எவ்வளவு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது, இப்படி குப்பைகளை கொட்டினால் எப்படி இருக்கும் என்பதை தென் கொரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்,” தெரிவித்தார். தென் கொரியா சார்பில் நீண்ட காலமாக பலூன்கள் அனுப்பப்பட்டு வருவதற்காகவே இவ்வாறு பலூன்கள் அனுப்பப்பட்டன என்று கிம் காங் II தெரிவித்துள்ளார்.

 

 

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version