5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாகிஸ்தானை உலுக்கிய கொடூரம்.. பெல்ஜியம் பெண்ணை 5 நாள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி..

பெல்சியம் நாட்டை சேர்ந்த 28 வயதான பெண் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரை யாரோ முகம் தெரியாத நபர்கள் தன்னை 5 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிசுதீன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானை உலுக்கிய கொடூரம்.. பெல்ஜியம் பெண்ணை 5 நாள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி..
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 15 Aug 2024 21:49 PM

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் நேற்றுதான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், வெளிநாட்டை சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் 78வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 ஆம் தேதி இஸ்லாமாபாத்தின் தெருக்களில் 28 வயது பெல்ஜியப் பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். பாகிஸ்தான் ஊடகங்கள், பொலிஸாரை மேற்கோள் காட்டி, அந்த பெண் தன்னை ஐந்து நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானில் இருக்கும் தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.


பெல்சியம் நாட்டை சேர்ந்த 28 வயதான பெண் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரை யாரோ முகம் தெரியாத நபர்கள் தன்னை 5 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிசுதீன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிசுதீனின் உடைமைகளை மீட்க அவரது வீட்டில் மேலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வரும் அதே மருத்துவமனையில் தமிசுதீனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெல்ஜிய தூதரகத்தையும் தொடர்பு கொண்ட போலீசார், பாகிஸ்தானுக்குச் வந்த அந்த நபர் குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறியதுடன், அவர் தனது சொந்த இடம் என்று சுட்டிக்காட்டிய பகுதி இரு நாடுகளின் எல்லையில் இருப்பதால் அவர்களை நெதர்லாந்து தூதரகத்தை அணுகும் படி தெரிவித்தனர்.

மேலும் படிக்க: நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்.. அதிகாலை 3.17 மணிக்கு தொடங்கும் கவுண்டவுன்..

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று தெரிகிறது. பாகிஸ்தானில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தெருவில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News