5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

US Presidential Election: விறுவிறுப்பாக நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. மழையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிப்பு!

America: இந்திய நேரப்படி இன்று மாலை 5.30  மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நாளை அதிகாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. 50 மாகாணங்களில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவு முடிந்த உடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும். இதனிடையே அங்குள்ள மிசோரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு கருதி சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

US Presidential Election: விறுவிறுப்பாக நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. மழையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Nov 2024 21:46 PM

அமெரிக்க அதிபர் தேர்தல்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கொட்டும் மழையையும் பொறுப்பெடுத்தாமல் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் பதவி காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடையும் நிலையில் இன்று அதிபர் தேர்தல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம். இந்த முறை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் நேரடியாக களமிறங்கியுள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று மாலை 5.30  மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நாளை அதிகாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. 50 மாகாணங்களில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவு முடிந்த உடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும். இதனிடையே அங்குள்ள மிசோரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு கருதி சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

Also Read: US President Election: இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. எப்படி வாக்குப்பதிவு நடக்கும் தெரியுமா?

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வாக்குச்சாவடியை எளிதில் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு செயல்பட்டு வரும் தேவாலயம் வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் சிரமப்பட்டு வாக்களித்து வருகின்றனர். தேர்தல் பணியாளர்கள் ஜெனரேட்டர் வசதியுடன் வாக்குப்பதிவை நடத்தி வருகின்றனர்.

வைரலாக பரவும் போலி வீடியோ!

இது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் FBI புலனாய்வு அமைப்பு வெளியிட்டதாக ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதாவது வாக்குச்சாவடிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதால் தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் தெரிவிப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த வீடியோ போலியானது என FBI புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ளதால் ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கும் நேரமும் முடியும் நேரமும் மாற்றம் பெறும். கருத்துக் கணிப்பு முடிவுகளில் டொனால்ட் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னணியில் உள்ளதால் அவர்தான் அடுத்த அமெரிக்க அதிபராக வருவார் என பலரும் கணித்துள்ளனர்.

Also Read: WhatsApp : இனி போலி புகைப்படங்களுக்கு வாய்ப்பே இல்லை.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ள வாட்ஸ்அப்!

முன்னதாக இருவரும் அமெரிக்கா முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டனர். மேலும் நேரடி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு வாக்குகளை முன்கூட்டியே செலுத்தும் வசதியும் இருப்பதால் 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் முன்னதாகவே வாக்களித்து விட்டனர். அதிபர் வேட்பாளரான கமலஹாரிஸ் இமெயில் மூலம் நேற்று தனது வாக்கை செலுத்தினார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் பென்சிவேனியாவில் நடந்த பேரணியின் போது, அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக்குவோம். அதற்கு நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கடந்த 4 ஆண்டுகளாக நாம் அனைவரும் இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தோம். நாளை (இன்று) நடக்கும் வாக்குப்பதிவு மூலம் உங்களைப் போன்ற கடின உழைப்பாளி தேச பக்தர்களால் தான்  நம் நாடு காப்பாற்றப்பட போகிறது.

எனவே வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள். கடைசி கட்ட கருத்துக் கணிப்பின்படி மாறும் வாய்ப்பு கொண்ட 7 மாகாணங்களில் தனக்கு ஆதரவு இருப்பதாக ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் எனது தலைமையிலான அரசு மக்களின் பொருளாதாரக் கனவை விரைவில் பொருளாதார அதிசயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest News