5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜய் உடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..

தேமுதிக மறைந்த தலைவர் விஜயகாந்தின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் வலது கையில் டாட்டுவாக போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ள நிலையில், டாட்டு போடும் நிகழ்வை தேமுதிக  பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.

விஜய் உடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..
பிரேமலதா விஜயகாந்த்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 24 Aug 2024 15:19 PM

பிரேமலதா விஜயகாந்த்: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் வகையில் 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் வலது கையில் டாட்டுவாக போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ள நிலையில், டாட்டு போடும் நிகழ்வை தேமுதிக  பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டனின் 72 வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் எம்ஜிஆர் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு கேப்டன் நினைவிடத்தில் வைத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க இருக்கிறோம்.

கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அவர் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மன வலியோடு தான் இதை கொண்டாடுகிறோம். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கொடி அறிமுகத்திற்கு முன்பாக வீட்டிற்கு வந்து கேப்டனுக்கு விஜய்  மரியாதை செலுத்தினார். கேப்டனின் ஆசிர்வாதத்தை வாங்கி சென்றார். விஜய்க்கு தேமுதிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. அரசியல் என்றாலே சர்ச்சைகள்தான். அந்த சர்ச்சைகளை சவால்களை முறியடித்து தான் வெற்றி பெற முடியும். இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது. இதுபோன்று பல சர்ச்சைகளை சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதுதான் அரசியல். விஜய் புத்திசாலி அமைதியான பையன். நிச்சயமாக இதையெல்லாம் சமாளிப்பார் என்று நம்புகிறேன்.

Also Read: இயக்குனர் நெல்சனுக்கு சிக்கல்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் அதிரடி!

திரை உலகில் விஜய் நிறைய சவால்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார்.  அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அறிவுரை

திமுக கடவுள் இல்லை இல்லை என்று சொல்கிறார்கள் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துகிறார்கள். மக்களோடும் தெய்வத்தோடும் தான் கூட்டணி என சொல்லி அரசியலுக்கு வந்தவர் கேப்டன் அவர் போன்று உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் நேரத்துக்கு தகுந்தார் போல் மாற்றி பேசுவதை மக்கள் நிச்சயமாக ஏற்க மாட்டார்கள். வெளிநாட்டிற்கு சென்று உண்மையிலேயே முதலீடு ஈர்த்து அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால் தேமுதிக தான் முதலில் வாழ்த்து சொல்லும் ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் எத்தனை நிறுவனங்கள் இங்கு வந்துள்ளது என்ற கேள்வி எழுகிறது. முதலீடுகளை ஈர்க்க முதல்வருக்கு வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன்.

Also Read: விஜயின் ‘கோட்’ படம் வெளியாவதில் சிக்கலா? தயாரிப்பாளர் விளக்கம்

டாட்டூ போடும் நிகழ்வு திடீரென்று இன்று தயார் செய்தது கிடையாது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே பலர் விருப்பம் தெரிவித்து இருந்தனர். அனைத்து வகையான பாதுகாப்போடும் தான் டாட்டூ போடப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Latest News