5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்.. திட்டம் என்ன? அமைச்சர் விளக்கம்..

உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்து, அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும் என்ற கொள்கையோடு தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்.. திட்டம் என்ன? அமைச்சர் விளக்கம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 15 Aug 2024 17:57 PM

முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்: தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்கா செல்லவிருப்பதாக ஏற்கனவே சட்டமன்றத்தில் தொழில்வளத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், வரும் 27 ஆம் தேதி அமெரிக்கா புறப்படுவார் என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் பல முக்கிய நிறுவனங்களை சந்திப்பதோடு, பல்வேறு முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி அரசு சார்பில் சென்னை பாரிமுனை குமாரசாமி திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சரின் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியை கண்டு வருவதாகவும், முதலமைச்சர் உரையில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டும் அதற்கு திமுக ஆட்சி எவ்வளவு உறுதுணையாக உள்ளது என்பது முதலமைச்சர் உரையில் தெரிவத்ததாக கூறினார்.

மேலும் படிக்க: நாளை தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களில் மின்தடை.. எங்கே தெரியுமா?

மேலும், தொழில் வளர்ச்சிக்கான அரசின் முன்னெடுப்புகளை முதலமைச்சர் சுட்டிக்காட்டியதாக கூறிய அவர், தொழில்துறை இன்னும் வேகத்துடன் செயல்பட்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு தொழில் வளர்ச்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் எனவும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே தொழில்துறை மீது முதலமைச்சர் கவனம் செலுத்தி வருவதாகவும், எவ்வளவு முதலீடுகள் வருகிறது என்பதைவிட எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், முதலமைச்சர் வரும் 27ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு பல முக்கிய நிறுவனங்களை சந்திக்க உள்ளதோடு, பல்வேறு முதலீட்டுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..

உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்து, அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும் என்ற கொள்கையோடு தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

இதனை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து பல அந்நிய முதலீடுகளை மாநில அரசு ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சில முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை உறுதி செய்திருந்தார். அடுத்தக்கட்டமாக வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு மாத காலம் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

Latest News