5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இனி கவலை வேண்டாம் மக்களே..! கூடுதலாக பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு..

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 18 ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் பேருந்துகளை நாடி வருகின்றனர். இதனால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இன்று முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இனி கவலை வேண்டாம் மக்களே..! கூடுதலாக பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 15 Aug 2024 18:50 PM

கூடுதல் பேருந்துகள் இயக்கம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த ஜூலை 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டாவளங்களில் 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ஜல்லி கற்கள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏறகனவே பழைய கற்கள் அகற்றப்பட்ட நிலையில் புதிய சிலிப்பர் கற்கற் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் வரும் 18 ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் பேருந்துகளை நாடி வருகின்றனர். இதனால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இன்று முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ தாம்பரம் ரயில் நிலையத்தில் 16.08.2024 முதல் 18.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பயணிகள் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 15.08.2024 முதல் 18.08.2024 வரை தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தில் 15.08.2024 முதல் 18.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 14.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்.. திட்டம் என்ன? அமைச்சர் விளக்கம்..

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி 15.08.2024 முதல் 18.08.2024 வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கள்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து திநகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் மா.போ.கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: விஜய் வாங்கியுள்ள புதிய காரில் இவ்வளவு வசதிகளா? விமானத்துக்கு இணையாக சிறப்பம்சங்கள்!

மேலும், காவல்துறையின் வேண்டுகோளின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மார்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முடிய தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News