விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! - Tamil News | The new update of the movie Diligence.. fans are happy..! | TV9 Tamil

விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்து நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு பட்ஜெட் காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

அஜீத் - அர்ஜூன்

Updated On: 

18 Jun 2024 09:56 AM

லைக்கா நிறுவன தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவாகி வரும், விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வருகிறது. நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் நீண்டகாலமாக விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர். நடிகர் அஜித்துடன் இத்திரைப்படத்தில், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தின் அப்டேட் குறித்து சமீபத்தில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: ரீ என்ட்ரியா? சசிகலாவுக்கு Exit-யே கொடுத்தாச்சு” ஜெயக்குமார் விமர்சனம்!

விடாமுயற்சி திரைப்ப்படத்தின் 70 சதவீதம் படப்பிடிப்பு இதுவரை முடிவடைந்துள்ள நிலையில், பட்ஜெட் காரணமாக, திடீரென இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழு சென்னைக்கு திரும்பியதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து ரசிகர்களுக்கு எந்த வித அப்டேட்டும் வழங்கப்படமால் இருந்தது. அதற்கிடையில், நடிகர் அஜீத் நடிக்கும், குட் பேட் அக்லி திரைப்படம் குறித்த அப்டேட் வெளிவந்ததால், மீதமுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று சிகர்கள் சமூகவலைதளங்களிள் கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது பற்றி நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்

Also Read: Maharaja Movie : மகாராஜா வெளியான 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. மாஸ் காட்டும் விஜய்சேதுபதி..!

மங்காத்தா திரைப்படத்தில் அஜித்- அர்ஜூன் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், விடாமுயற்சி திரைப்படத்திலும் இந்த கூட்டணி தொடர்கிறது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கவிருப்பதாக நடிகர் அர்ஜூன் கூறியுள்ளார். இம்மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க இருப்பதாகவும் கூறினார். இன்னும் 20 முதல் 30 சதவீதம் தான் படப்பிடிப்பு மீதமுள்ளது. அதன்பின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெரும்” என கூறியுள்ளார். படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி இருப்பதாகவும் நடிகர் அர்ஜூன் கூறியுள்ளார்.

இந்தாண்டு தீபாவளிக்கு விடாமுயற்சி திரைப்படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு மோண்டும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!