Job Recruitment: உதவி மையத்தில் பெண்களுக்கு பணி.. ஜூன் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!
பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதியுடைய நபர்கள் ஜூன் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். பெண்களுக்கான இந்த வேலை வாய்ப்பில் ஏராளமானோர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்கள் உதவி மையத்தில் தொகுப்பு அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புவர்கள் விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, வழக்கு பணியாளர்கள் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பவர்கல், சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசர்கர் அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் அரசு, அரசு சாராத திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்த பட்சம் ஓராண்டு உளவியல் ஆலோசனை அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
Also Read: வெற்றியை தொடர்ந்து ஹேப்பி நியூஸ்.. ராகுலுக்கு கிடைத்த ஜாமீன்.. என்ன மேட்டர்?
வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், உள்ளூரைச் சார்ந்த பெண்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, பாதுகாப்பாளர் காலிப்பணியிடத்துக்கு அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய முன் அனுபவம் பெற்றவராகவும், உள்ளூரைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இப்பணியிடத்துக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.12000 வழங்கப்படும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்முக உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதாவது ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த முன்னனுபவம் உடையவராகவும், நன்கு சமைக்க தெரிந்த, உள்ளூரைச் சார்ந்த பெண்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: தேர்தலில் வென்ற கங்கனா ரனாவத்… மறைமுகமாக கலாய்த்த பிரபல நடிகை!
வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியடையவர்கள் விரும்பும் பதவிகளுக்கு Chennai.nic.in எனும் இணையத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களை ஜூன் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது onsnorthechennai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.