Bitter Gourd Benefits : பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! - Tamil News | Benefits of eating everyday bitter gourd | TV9 Tamil

Bitter Gourd Benefits : பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Updated On: 

03 Jul 2024 09:51 AM

பாகற்காய் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது கசப்பு சுவை தான். அதனால் பலரும் அதனை வெறுத்து ஒதக்குகின்றனர். பாகற்காய் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், கசக்கும் என்ற ஒரே வார்த்தைக்காக அனைவரும் அதனை சாப்பிட யோசிக்கின்றனர். பாகற்காயை ஜூஸ், சாம்பார், வருவல், பொறியல், என அனைத்து வகைகளிலும் உணவாக எடுத்துக்கொள்கின்றனர். பாகற்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது.

Bitter Gourd Benefits : பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பாகற்காய்

Follow Us On

பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நிலையில், தினசரி உங்கள் உணவில் பாகற்காயை சேர்த்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பாகற்காயை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஏ, பி, சி, ஈ, மற்றும் துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் மூலமாகும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக பாதுகாக்கிறது. மேலும் அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகளின் அற்புதமான ஆதாரமாக உள்ளது.

Also Read: Whatsapp AI : இனி வாட்ஸ்அப்பிலும் AI.. மெட்டாவின் அதிரடி அறிவிப்பு.. சிறப்பு அம்சங்கள் என்ன?

பாகற்காயின் நன்மைகள்:

பாகற்காயை நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துவதால், நீரிழிவு நோயளிகளுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

பாகற்காயை வேகவைத்தோ அல்லது ஜூஸாகவோ தினமும் குடிக்கும் போது நமது மெட்டபாலிக் விகிதம் அதிகரித்து, பசியின்மையை போக்குகிறது. நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும் குறைவான கலோரிகளையே கொண்டுள்ளது. ஆகையால் சிறந்த செரிமானத்திற்கும், உடல் எடை குறைக்க உதவுகிறது.

பாகற்காய் சாறாக உட்கொள்வதால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான நொதிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் போன்றவற்றிற்கு உதவுகிறது. பாகற்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பயோ ஆக்டிவ் கலவைகள் சில குறிப்பிட்ட புற்றுநோய் நம்மை தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது

Also Read: Hathras stampede : ஹத்ராஸ் கூட்ட நெரிசல் கொடூரம்.. விபத்து நடந்தது எப்படி?

பாகற்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு அதிகளவில் தர மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாகற்காயில், கல்லீரலை சுத்தம் செய்து பாதுகாக்க உதவும் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. இது மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் அழற்சி போன்ற கல்லீரலுக்கு நன்மையளிக்கிறது. மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

பாகற்காயில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது, இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முகப்பரு, தடிப்பு மற்றும் வறண்ட தோல் போன்ற தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version