Reduce Fat: உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் பழங்கள்! - Tamil News | Find out about fruits that help reduce fat in the body! | TV9 Tamil

Reduce Fat: உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் பழங்கள்!

Updated On: 

28 Jun 2024 08:48 AM

நம்முடைய உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று 2 வகையான கொழுப்புகள் உள்ளது. இதில் கெட்ட கொழுப்பு ரத்த நாளங்களில் படிந்து உடலுக்கு பல்வேறு பிரச்சினைகளை தருகிறது. இதனை குறைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும் சூழலில் மிகவும் சுலபமான முறையில் நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்களின் மூலமாக அவற்றை குறைக்கும் முறைகள் குறித்து காணலாம்.

Reduce Fat: உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் பழங்கள்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

இன்றைய மக்கள் மிகவும் பாதிக்கப்படும் ஒரு பெரிய விஷயமாக கொலஸ்ட்ரால் உள்ளது, நூற்றுக்கு ஐம்பது சதவீதம் பேர், கெட்ட கொழுப்புகள் நிறைந்து காணப்படுவதால், மருத்துவமனைகளையும், உடற்பயிற்சி கூடங்களையும் நோக்கி படையெடுக்கின்றனர். அனைவரும் கொலஸ்ட்ரால் என்ற வார்த்தையைக் கேட்டாலே, பயத்திற்கு ஆளாகின்றனர். அன்றாடம் உண்ணும் உணவுகளில் இருந்து வரும் கொழுப்பு, பிளேக்-கட்டமைக்கும் பொருளைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், கொலஸ்ட்ரால் என்பது உடலும் இயற்கையாக உற்பத்தி செய்யும் ஒரு பொருள் மற்றும் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு உள்ளது. கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமானால், காலை உணவு மற்றும் நம்முடைய உணவு பழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

Also Read:  தினமும் உடல் வலி பிரச்னையா? இதை மட்டும் செய்யுங்க போதும்!

திராட்சை பழம்

திராட்சை பழம் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நொதிகள், குறைந்த கலோரிகள் மற்றும் நீர் சத்துக்கள் ஆகியவை கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

அவகேடோ

ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொருளாக உள்ளது. இவை நீண்ட நேரம் உடலை நீரேற்றம் ஆக வைப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. பசியை குறைத்து வளர்ச்சியை மாற்றம் மற்றும் அதன் செயல்பாட்டை ஆதரிப்பதாகவும் உள்ளது.

பெர்ரி பழங்கள்

அவுரி நெல்லிகள் மற்றும் ஸ்ட்ராபெரிகள் ஆகியவை இந்த பட்டியலில் இடம்பெறுகின்றன. இதில் நார்ச்சத்து ஆக்சிஜனேற்றுகள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளது. இது வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கின்றன. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறது.

Also Read:  இணையத்தில் வைரலாகும் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டர்

ஆப்பிள்கள்

நார்ச்சத்து மற்றும் அதிக நீர்ச்சத்து நிறைந்ததாக ஆப்பிள்கள் உள்ளன.
இவை முழுமையாக நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது. ஆப்பிள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி அதிக அளவிலான கலோரிகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துகிறது.

பப்பாளி

செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு இவை உதவுகின்றன. பப்பாளிகள் குறைந்த அளவிலான கலோரிகள் அதிக அளவிலான நார் சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் எடையை அதிகரிப்பதற்கும் உதவுகிறதும்

வாழைப்பழம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உணவாக வாழைப்பழங்கள் உள்ளன. வாழைப்பழத்தில் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் ஆரோக்கியமான பழமாக கருதப்படுகிறது.

 

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version