Karthigai Amavasya: கார்த்திகை அமாவாசை எப்போது?.. திதி கொடுக்க உகந்த நேரம் எது?
Karthigai 2024: இந்த நாளன்று செவ்வாய் பகவான் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவதால் நாம் சந்திக்கும் பலவிதமான துன்பங்கள் நம்மை விட்டு விலகும். இதில் ஆஞ்சநேயரை வழிபடுவது எப்பேர்பட்ட கடன் பிரச்சினைகள் இருந்தாலும் விடுதலை கிடைக்கும்.
கார்த்திகை அமாவாசை: பொதுவாக இந்து மதத்தை பொறுத்தவரை அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி, பிரதோஷம், கிருத்திகை போன்ற தினங்கள் முக்கிய விசேஷ நாட்களாக கருதப்படும். அந்த வகையில் அமாவாசை என்பது ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய முக்கிய நாளாகும். பஞ்சாங்கத்தை பொருத்தவரை மொத்தம் 16 திதிகள் உள்ளது. இதில் அமாவாசை மட்டும் முன்னோர்களை வழிபடும் நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாளில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினால் நம்முடைய தலைமுறைகள் பாதுகாப்புடன் செழித்து வாழும் என்பது நம்பிக்கையாகும். சிலர் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தான தர்மம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக இருக்கும்.
அப்படி ஒவ்வொரு மாத அமாவாசை திதியிலும் வழிபட முடியாதவர்களுக்காகத்தான் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைகள் மிக முக்கியமான ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. வருடம் முழுக்க வணங்காதவர்கள் இந்த மூன்று அமாவாசைகளிலும் கண்டிப்பாக முன்னோர்களை வணங்கினால் தொட்டது துலங்குவதோடு மட்டுமல்லாமல் நம் குடும்பத்திற்கு மறைந்த முன்னோர்கள் பாதுகாப்பு அரணாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
Also Read: Karthigai: கார்த்திகை அமாவாசை.. லட்சுமி தேவி அருளை பெற சொல்ல வேண்டியவை!
கார்த்திகை அமாவாசை
2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் இன்னும் இரண்டு அமாவாசைகள் மட்டுமே உள்ளது. ஒன்று கார்த்திகை, மற்றொன்று மார்கழி. இதில் கார்த்திகை அமாவாசை வரும் நவம்பர் 30ஆம் தேதி வருகிறது. இந்த அமாவாசையானது 30 ஆம் தேதி காலை 11.04 தொடங்கி மறுநாள் மதியம் 12.19 வரை உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு திதி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை வழிபாடாவது நடத்த வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை வந்தாலும் சில மாதங்கள் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை தீர்க்கும் அமாவாசைகளில் ஒன்றாக கார்த்திகை அமாவாசை உள்ளது. குறிப்பாக நிதி தொடர்பான பிரச்சனைகள் சிக்கித் தவிப்பவர்களுக்கு இந்த நாள் மிக முக்கியமான நாளாக உள்ளது.
இந்த நாளன்று செவ்வாய் பகவான் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவதால் நாம் சந்திக்கும் பலவிதமான துன்பங்கள் நம்மை விட்டு விலகும். இதில் ஆஞ்சநேயரை வழிபடுவது எப்பேர்பட்ட கடன் பிரச்சினைகள் இருந்தாலும் விரைந்து அதிலிருந்து தீர்வு கிடைக்க வழிவகை செய்யும். மேலும் இந்த நாளில் தான் லட்சுமிதேவி பாற்கடலில் இருந்து அவதரித்து பூமிக்கு வருவதாக ஐதீகங்கள் உள்ளது. எனவே இந்த அமாவாசை நாளில் எப்போது திதி கொடுக்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.
Also Read: Sabarimala: வீட்டிலேயே ஐயப்ப பக்தர்கள் கன்னிப்பூஜை எப்படி நடத்தலாம்?
திதி கொடுக்க உகந்த நேரம் எது?
இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நினைப்பவர்கள் டிசம்பர் 1 ஆம் தேதி காலை சூரிய உதயம் தொடங்கி மதியம் 12 மணிக்குள் செய்ய வேண்டும். காரணம் அமாவாசையானது சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு செய்யப்படுகிறது. இதனால் முதல் நாள் நவம்பர் 30 ஆம் தேதி திதி வந்தாலும் அன்று மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை எமகண்டம் இருப்பதால் வீட்டில் புகைப்படத்தின் முன் படையலிட்டு வழிபாடு நடத்த விரும்பும் மக்கள் 1.30 மணிக்கு முன்னதாகவே வழிபாட்டை முடித்து விட வேண்டும்.
மேலும் இந்த நாளில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதோடு, இயலாதவர்களுக்கு பணம் அல்லது சாப்பாடு தானமாக வழங்கலாம். மேலும் திதி கொடுப்பவர்கள் காலை ஒரு வேளை விரதம் இருந்து மதியம் அதனை முடித்துக் கொள்ளலாம். திதி கொடுப்பவர்கள் அன்றைய நாளில் வாழை இலையில் தான் சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு முன் காகத்திற்கு உணவு படைத்து விட வேண்டும். மாலையில் மீண்டும் வழிபாடு செய்து படையலில் இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்காமல் வீட்டில் உள்ள குடும்பத்தினர் மட்டுமே சாப்பிட வேண்டும். திதி கொடுக்க முடியாத சூழலில் இருப்பவர்கள் நவம்பர் 30 ஆம் தேதியே விரதம் கடைபிடித்து வழிபடலாம்.
ஒருவேளை நீங்கள் சனிக்கிழமை அமாவாசையன்று வழிபாடு நடத்த முடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். மறுநாள் (டிசம்பர் 1) காலை 12.19 வரை திதி இருப்பதால் அதற்குள் வழிபாடு நடத்தி விடுவது சிறந்தது.