5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ashwin: சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைந்த அஷ்வின்.. நிர்வாகத்திலும் முக்கியப்பொறுப்பு..!

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக, சென்னையின் புறநகர் பகுதியில் செயல்திறன் மையம் ஒன்றை திறந்த நிலையில், அந்த மையத்தின் தலைமை பொறுப்பானது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ashwin: சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைந்த அஷ்வின்.. நிர்வாகத்திலும் முக்கியப்பொறுப்பு..!
அஷ்வின்
intern
Tamil TV9 | Updated On: 27 Sep 2024 10:24 AM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்தார். இதன் மூலம் வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் நிறுவனத்துடன் இணைந்து, ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் உயர் செயல்திறன் மையத்தின் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த உயர் செயல்திற மையம் சென்னையின் புறநகரான நாவலூர் பகுதியில் உள்ளது. அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் இந்த மையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:Weight Loss : உடல் எடையைக் குறைக்கணுமா? இதிலெல்லாம் கவனம் செலுத்துங்க

இந்த மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்த செயல்திறன் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஆலோசனை சொல்வது, என்ன பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பானது அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிஎஸ்கேயின் செயல்திறன் மையத்திற்கு அஸ்வினுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் விரைவில் சிஎஸ்கே அணியுடன் இணைவதற்கான வழியாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்காக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கேவுடன் இணைவதற்கான வலுவான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .ஒரு வேளை வீரர்கள் ஏலத்தில் சிஎஸ்கேயால் அஸ்வினை வாங்க முடியாவிட்டால், வீரர்கள் ஏலத்திற்குப் பிறகு நிச்சயம் அவரை வாங்குவதற்கு சிஎஸ்கே நிர்வாகம் முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read: 48 வயது ஹீரோ என்னை விட இளமையா இருக்கிறார்… ஜான்வி சொன்னது யார் தெரியுமா?

அஸ்வினை ஏலத்தில் எடுப்பது தொடர்பாக சிஎஸ்கே சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறும்போது, “இது முற்றிலும் ஏலத்தின் போக்கைச் சார்ந்தது. ஏலத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முதலில் அஸ்வின் உயர் செயல் திறன் மையத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். மையத்தின் கிரிக்கெட்டுக்கு உரித்தான நடவடிக்கைகளை அவர் கவனித்துக் கொள்வார் என்று கூறினார்.

 

 

Latest News