Gautam Gambhir : இந்தியா உலக கோப்பையில் 1 ரன்னில் தோற்ற போது இரவு முழுவதும் அழுதேன் – கம்பீர்
இந்திய அணி உலகக்கோப்பையில் 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் தோற்றபோது இரவு முழுவதும் அழுதேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். மிகச்சிறந்த இடது கை பேட்ஸ்மேனான கவுதம் கம்பீர் 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இந்திய அணியின் பல வெற்றிப்பயணங்களில் களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக, விளையாடும் குணம் கொண்டவர். கடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு அந்த அணி கோப்பையை கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றினார். மேலும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான கவுதம் கம்பீர் அவ்வபோது ஏதாவது ஒரு தகவலை சமூக வலைதளத்தில் பகிர்வார். அவர் தற்போது உலக கோப்பை போட்டி ஒன்றில் தான் அழுதது குறித்து மனம் திறந்து பேசினார்.
Also Read: Director Shankar: இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்து 3 வித்தியாசமான கதைக்களங்கள் என்ன தெரியுமா..?
கம்பீர் கூறியதாவது, “ 1992ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த இரவு முழுவதும் நான் அழுதேன். ஏனென்று தெரியவில்லை. அதற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி நான் அது போல அழுததே இல்லை. அப்போது எனக்கு 11 வயதே ஆகியிருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நான் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992ம் ஆண்டு உருவான என் கனவை 2011ம் ஆண்டு நிறைவேற்றிக் கொண்டேன். அந்த போட்டிக்கு முன்பும், பின்பும் நான் மகிழ்ச்சியற்ற தருணங்களை உணர்ந்திருக்கிறேன். ஆனால், அதுபோல நான் அழுததே கிடையாது.” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், என்னுடைய வாழ்க்கையில், நான் யாரையுமே பின்தொடர்ந்தது இல்லை. இந்த உண்மையை நான் சொல்லும் பொழுது இதற்காக நான் விமர்சனம் செய்யப்பட்டு இருக்கிறேன். நான் எப்பொழுதும் ஒரு ரோல் மாடல் தேவை என்று நான் நினைத்ததில்லை. நான் எப்பொழுதும் சுயமாக இருக்க முயற்சி செய்தேன். யாரையாவது ரோல் மாடலாக வைத்திருப்பவர்கள் அவர்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். நான் இப்பொழுது வரை யாரையும் கண் மூடித் தனமாக பின்பற்றியது கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.