Watch Video : கேட்ச் பிடிக்கும் ஆர்வம்.. பலமாக மோதிக்கொண்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள்..!

T20 World Cup: ஆன்டிகுவாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் ரபாடா மற்றும் ஜான்சன் இருவரும் பந்தை கேட்ச் பிடிக்க சென்று மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Watch Video : கேட்ச் பிடிக்கும் ஆர்வம்.. பலமாக மோதிக்கொண்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள்..!
Updated On: 

24 Jun 2024 13:29 PM

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதிய போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றாலும், சமூக வலைதளங்களில்  அணியின் வீரர்கள் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மார்கோ ஜான்சன் மற்றும் ககிசோ ரபாடா இருவரும் மோதிக்கொண்டனர். இந்த வீடியோ ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் கோலாகலமாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் ஹிட் ஆட்டங்கள் விறுவிறுப்புடன் நடைபெற்ற வரும் நிலையில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

Also Read: ”வயநாடு மக்களின் அளவற்ற அன்பு” ராகுல் காந்தி எழுதிய உருக்கமான கடிதம்!

ராபாடா – ஜான்சன் மோதல்

இந்த போட்டிக்கு எட்டாவது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைல் மேயர்சிடமிருந்து ஒரு சிக்சரை தடுக்க முயன்ற போது ஜான்சன் மற்றும் ரபாடா எல்லைக்கோட்டில் நின்றிருந்தனர். அப்போது இருவரும் அந்த பந்தை தடுக்க முயன்ற போது இருவரும் மோதி கீழே விழுந்தனர். ஆனால் அந்த பந்து சிக்சருக்கு சென்றதால் 6 ரன்கள் கிடைத்தது. மோதிக்கொண்ட இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் முதல் இரண்டு ஓவர்களுக்கு மட்டும் பந்து வீசிய ஜான்சன் அதன் பிறகு பந்து வீசவில்லை. பின்னர் அடுத்தடுத்த ஓவர்களை ஓவர்களை ரபாடா வீசினார். இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இருவரும் மோதிக்கொண்ட இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா வெற்றி

இன்று ஆன்டிகுவாவில் உள்ள சர் விவான் ரிச்சர்ட் மைதானத்தில் நடைபெற்ற பெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின இந்த போட்டிகள் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து 136 2 எடுத்தால் வெற்றி என்று இலக்கை நோக்கி களம் இறங்கியது தென் ஆப்பிரிக்கா. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் 17 ஓவரில் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே எய்டன் 18 ரன்கள், திரிஷ்டன் 29 ரன்கள், ஹென்றி 22 ரன்கள், மார்கோ 21 ரன்களை எடுத்த நிலையில், தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு தேவையான ரன்களை பெற்றது. மார்கோ யான்சனின் 17-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி தனது அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது.

Also Read: T20 World Cup: வங்கதேசத்தை 50 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!

 

தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!
கிராமத்து லுக்கில் நடிகை அதிதி ஷங்கர்!
நடிகை ஷ்ரத்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!