T20 World Cup: எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் - Tamil News | T20 World Cup: We have confidence now that we can beat any team- Afghanistan captain Rashid Khan | TV9 Tamil

T20 World Cup: எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்

Updated On: 

27 Jun 2024 16:47 PM

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை எப்போதும் மறக்க முடியாது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நன்றாக விளையாடினார்கள். எங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தற்போது பிறந்துள்ளது. நாங்கள் எங்களை மேலும் வலுவாக கட்டமைத்துக்கொண்டு மீண்டும் அதிக பலத்துடன் திரும்புவோம், எங்களுக்கு ஆதவளித்த அனைவரும் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் நன்றி தெரிவித்துள்ளார்

T20 World Cup: எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
Follow Us On

இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் டி20 தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளதாவது, இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் அனுபவித்து விளையாடியுள்ளோம். நிறைய கடினமான சூழல்களை எங்கள் வீரர்கள் சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். நாங்கள் சில பெரிய அணிகளை வீழ்த்தியிருக்கிறோம். இது எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்தத் தொடரிலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டு தான் செல்கிறோம் என்று கூறியுள்ளார்.

Also Read: IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.. இறுதிப்போட்டி வாய்ப்பு யாருக்கு..?

எங்களுக்கு இதுவொரு கடினமான நாள். நாங்கள் இதைவிட சிறப்பாக ஆடியிருக்க முடியும். நாங்கள் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராகவே இருந்தோம். ஆனால், தென்னாப்பிரிக்க பௌலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டுவிட்டார்கள்.  எங்களின் மிடில் ஆர்டரை இன்னும் வலுப்படுத்த வேண்டும். அட்டாக்கிங்காக இன்னிங்ஸை கடைசிவரை எடுத்துச்செல்லக் கூடிய வகையில் எங்கள் மிடில் ஆர்டரை தயார் செய்யவேண்டும். இதனை சரியாக செய்தால் நாங்கள் இன்னும் நல்ல அணியாக வளருவோம் என்று நினைப்பதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டி20 உலக கோப்பை தொடரில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுள்ளது. மேலும் வெற்றிகுறித்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்கா வீரர்  ககிஸோ ரபாடா கூறியுள்ளதாவது, இன்றைய போட்டியில் இப்படி நடக்குமென்று  நாங்களும் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் போல அதிரடியாக பந்துவீச வேண்டும் என்று நினைத்தோம். பந்து நன்றாக ஸ்விங் ஆனது. அனைத்தும் நாங்கள் நினைத்த படியே நடப்பதில் மகிழ்ச்சி. இந்த அணி உலகக்கோப்பையை வெல்லும் என நம்புகிறோம். நம்பவில்லை என்றால் ஆடுவதில் அர்த்தமே இல்லை தானே. சரியான இடங்களில் பந்துவீசியதற்கான பலனை இப்போது கிடைத்துள்ளதாக கூறினார்.

Also Read: SA vs AFG: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா..!

தென் ஆப்பிரிக்காவின் வெற்றி குறித்து கூறிய கேப்டன் எய்டன் மார்க்ரம்,  முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணியை  உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்செல்லும் கேப்டனாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், ஒரு கேப்டனால் மட்டுமே அணியை இந்த இடத்துக்கு கொண்டு வந்துவிட முடியாது. வீரர்கள் மட்டும் என்றில்லாமல் பயிற்சியாளர்கள் என பலரும் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டதால் நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று கூறினார்.

Related Stories
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version