T20 World Cup: சூப்பர் 8 சுற்றுக்கான உலக கோப்பை போட்டி.. எங்கு எப்படி காணலாம்? விவரம் இதோ..! - Tamil News | Where to watch World Cup match for Super 8 round..? Here are the details..! | TV9 Tamil

T20 World Cup: சூப்பர் 8 சுற்றுக்கான உலக கோப்பை போட்டி.. எங்கு எப்படி காணலாம்? விவரம் இதோ..!

நடப்பு டி20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்று 19 ஆம் தேதியான நாளை தொடங்குகிறது.  கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் லீக் சுற்று நிறைவடைந்தது. மொத்தம் 20 அணிகள் 4 குழுக்களாக லீக் சுற்றில் விளையாடின. லீக் சுற்றில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

T20 World Cup: சூப்பர் 8 சுற்றுக்கான உலக கோப்பை போட்டி..  எங்கு எப்படி காணலாம்? விவரம் இதோ..!

சூப்பர் 8

Updated On: 

18 Jun 2024 10:13 AM

ஐசிசி ஆண்கள் உலக கோப்பை போட்டி லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. நாளை தொடங்க உள்ளன . சூப்பர் 8 போட்டிகளில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணைகள் மோதும் போட்டி நார்த் சவுண்டில் உள்ள சர் விவியின் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போதும் போட்டி ஜூன் இருபதாம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் 8 சுற்றில் பங்கேற்கும் அணிகள் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவிலுள்ள மற்ற மூன்று அணிகளோடு மோத வேண்டும். இதில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

குழு 1                                                                 குழு 2

இந்தியா                                                     அமெரிக்கா

ஆப்கானிஸ்தான்                                  இங்கிலாந்து

ஆஸ்திரேலியா                                       மேற்கிந்திய தீவுகள்

பங்களாதேஷ்                                          தென் ஆப்பிரிக்கா

 

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி விளையாடும் போட்டிகள்:

 

இந்தியா – ஆப்கானிஸ்தான் : ஜூன் 20 – பார்படாஸ் மைதானம்

இந்தியா – வங்காளதேசம் : ஜூன் 22 – ஆண்டிகுவா மைதானம்

இந்தியா – ஆஸ்திரேலியா : ஜூன் 24 – செயிண்ட் லூசியா மைதானம்

Also Read: Rahul Dravid: கனடா அணியினரை உற்சாகப்படுத்திய இந்திய தலைமை பயிற்சியாளர்..!

டி20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு சூப்பர் 8 போட்டிகள் ஜூன் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன.

இப்போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8 மணி மற்றும் காலை 6:00 மணிக்கு தொடங்குகின்றன.  தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா இடையிலான முதல் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டிகளை தொலைக்காட்சியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழி வர்ணனையில் காணலாம். மேலும் disney+ hotstar என்ற செயலியின் மூலமும் டி20 உலக கோப்பை போட்டியை இலவசமாக மொபைல், கணினி போன்றவற்றிலும் காணலாம்.

Also Read: சீரியலில் நடித்தது தனக்கு பெரிய அவமானம் – நடிகர் வேல ராமமூர்த்தி

 

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!