5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

AIADMK: கோஷ்டி மோதலில் சிக்கி தவிக்கிறதா அதிமுக? – மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச எழுந்தார். அப்போது அவரை இடைமறித்த நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் மேடையில் ஈடுபட்டனர். இதனால் மேடையில் இருந்தவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

AIADMK: கோஷ்டி மோதலில் சிக்கி தவிக்கிறதா அதிமுக? – மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!
அதிமுக தொண்டர்கள் கோஷ்டி மோதல்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Nov 2024 18:24 PM

அதிமுக கள ஆய்வு குழு கூட்டத்தில் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் உயர் மட்ட தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒன்றரை ஆண்டு காலம் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியை தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக, திமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள், தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தான் தேர்தலில் நேருக்கு நேர் களம் இறங்கி வந்தது. இந்த முறை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக தேர்தலை சந்திக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அதிமுகவில் கள ஆய்வு கூட்டங்களில் கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மகாராஷ்டிரா 2024 தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரு தமிழர்கள்.. யாருக்கு வெற்றி?

கள ஆய்வுக்குழு குழு

கடந்த வாரம் அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அதிமுகவில் கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், ஜெயக்குமார், வரகூர் அருணாச்சலம், செம்மலை, வளர்மதி ஆகியோர் அடங்கிய கள ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்தக் குழுவின் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குழுவின் உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான நிலையில் திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் நிர்வாகிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடித்துக்கொண்ட ஆதரவாளர்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நெல்லை மாநகர அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கல்யாண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய நெல்லை மாவட்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகள் தான் வாங்கியது. அதிமுகவில் களப்பணி சரியாக இல்லை. நான் மாவட்ட செயலாளர் இருந்தபோது மற்ற நிர்வாகிகளை கலந்து பேசி தான் புதிய நிர்வாகிகளை நியமித்தேன். ஆனால் தற்போதைய மாவட்ட செயலாளர் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்கும்போது ஊரில் இல்லை. புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்ற போது களத்தில் வட்ட செயலாளர் கூட இல்லாத நிலை அதிமுகவுக்கு இருந்தது என குற்றம் சாட்டினார்.

Also Read: Crime: திருச்சியை உலுக்கிய கொலை.. சினிமா பாணியில் சிக்கிய குடும்பம்.. என்ன நடந்தது?

அப்போது மேடையில் இருந்த தற்போதைய மாவட்ட செயலாளரான கணேச ராஜாவின் ஆதரவாளர்கள் பாப்புலர் முத்தையா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். கணேச ராஜாவும் பாப்புலர் முத்தையாவிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக வாக்குவாதம்  முற்றிலும் நிலையில் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் செய்தியாளர்கள் கொண்டு வந்திருந்த கேமரா ஸ்டாண்ட் முதற்கொண்டு தூக்கி தாக்கி கொண்டனர்.

இதைப் பார்த்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருதரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். ஆனால் தொடர்ந்து சண்டை நடைபெற்ற நிலையில் ஒரு கட்டத்தில் கடுப்பான அவர்,  மோதலில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் வெளியே செல்லுங்கள் என உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து கைகலப்பு நின்று மேடையில் இருந்தவர்கள் பேசத் தொடங்கினார்.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச எழுந்தார். அப்போது அவரை இடைமறித்த நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் மேடையில் ஈடுபட்டனர். இதனால் மேடையில் இருந்தவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை திண்டுக்கல் சீனிவாசன் சமரசம் செய்தார். தொடரும் கோஷ்டி மோதல்களால் அதிமுக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest News