TN Rain Alert: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை.. மக்கள் மகிழ்ச்சி!
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மழை காரணமாக காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலின் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மழை காரணமாக காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரத்தின் சில பகுதிகளில் அடுத்த 4,5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதேபோல் கடலூர் மற்றும் புதுச்சேரியிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என அவர் கூறியுள்ளார்.
மேலும் இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இது மெதுவாக நடந்து வருவதால் டிசம்பர் 1 ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும். அதே சமயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை நோக்கி நல்ல மேகக்கூட்டங்கள் நகர்வதால் இன்று முதல் மழை தொடங்கும் என தெரிவித்துள்ளார். ஒருவேளை காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை கடற்கரையின் கீழ் கடந்தால் சென்னைக்கு நல்ல மழை இருக்கும் என வெதர்மேன் கணித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு தண்ணீர் பிரச்சனை இருக்குமா என்றால் இல்லை என்பது தான் எனது பதிலாக இருக்கும். காரணம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Also Read: Shaktikanta Das: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு?
இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்
இப்படியான நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து சுமார்திருகோணமலைக்கு தென்-தென்கிழக்கே 340 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 630 கிமீ தெற்கே-தென்கிழக்கே தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 750 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 830 கி.மீ தூரமும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Very heavy rain in madambakkam#ChennaiRains pic.twitter.com/i9yLg0qauh
— ⚜️🔱🚩Crypto சங்கி🇮🇳 – Say No To Drugs & DMK (@crypto_sanghi) November 26, 2024
இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை – தமிழக கடற்கரையை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகியவைகளிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், கன முதல் மிக கனமழை சில இடங்களிலும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
Also Read: Lemon Water: சாப்பிட்ட பிறகு எலுமிச்சை தண்ணீர் குடியுங்கள்… பல நன்மைகள் இருக்கு!
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பாட்டலும் மக்கள் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 25, 2024
நவம்பர் 27ஆம் தேதி நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவாரூர், அரியலூர் ஆகிய இடங்களில் மிக கனமழையும், கடலூர் மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் அதிக கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு, சிவகங்கை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பல இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.