Kanniyakumari Election Results 2024 : விஜய் வசந்த் வெற்றி.. கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த்தும், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணனும், அதிமுக சார்பில் நாசரேத் பாசிலியன் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவியது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் விஜய் வசந்தன் 5 லட்சத்து 21 ஆயிரத்து 356 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அடுத்ததாக, பாஜகவின் ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 49 ஆயிரத்து 384 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 1,71,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் விஜய் வசந்த்.
குமரியில் காங்கிரஸ் வெற்றி: கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த்தும், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணனும், அதிமுக சார்பில் நாசரேத் பாசிலியன் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவியது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் விஜய் வசந்தன் 5 லட்சத்து 21 ஆயிரத்து 356 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அடுத்ததாக, பாஜகவின் ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 49 ஆயிரத்து 384 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 1,71,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் விஜய் வசந்த். நாம் தமிழர் கட்சியின் மரியா ஜெனிஃபர் 49,885 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்தார். அதிமுகவின் நாசரேத்துக்கு பாசிலியன் 38,973 வாக்குகள் கிடைத்தது.
கன்னியாகுமரி தொகுதி:
மேற்குத் தொடர்ச்சி மலை, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தொகுதி, உலக அளவில் கன்னியாகுமரி மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக உள்ளது. திராவிட கட்சிகளை காட்டிலும், தேசியக்கட்சிகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த தொகுதியில் அதிக அளவில் நாடார் சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், மதத்தின் அடிப்படையிலேயே வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கின்றன. இப்பகுதியில் மீனவ சமுதாயத்தினர், இஸ்லாமியர்கள், வெள்ளாளர், நாயர், விஸ்வகர்மா, செட்டியார், பட்டியலினத்தவர், யாதவர், மலைவாழ் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் உள்ளனர். தென்னை, பூ வியாபாரம், நெல், வாழை, முந்திரி போன்ற விவசாய தொழில்கள் பிராதானமாக உள்ளது. ரப்பரை உற்பத்தி, மீன்பிடித் தொழில் போன்றவை முக்கிய தொழிலாக உள்ளது.
கன்னியாகுமரியை பொறுத்தவரை, தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. கடைசியாக 2009 ஆண்டு தேர்தலில் திமுகவை சேர்ந்த ஹெலன் டேவிட்சன் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2020 ஆம் ஆண்டு, கொரோனா தொற்றின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
Also Read: Dharmapuri Election Results 2024 : தருமபுரி தொகுதி மக்களவை தேர்தல் 2024
இடைதேர்தல் நிலவரம்
வசந்தகுமர் மறைவிற்கு பிறகு நடைபெற்ற இடைதேர்தலில், அவரது மகன், விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வேட்பாளாராக பொன்.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார். இந்த தேர்தலில் பொன்னாரை விட 1,34,374 வாக்குகள் அதிகம் பெற்று விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.
அந்த இடைத்தேர்தலில் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளும், பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளும் பெற்றிருந்தனர். இம்முறையும் இருவரும் நேருக்கு நேர் களம் காண்கின்றனர். மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அனிட்டர் ஆல்வின் 59,593 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட சுபா சார்லஸ் 8,536 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
கன்னியாகுமரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,47,378
ஆண் வாக்காளர்கள்: 7,72,623
பெண் வாக்காளர்கள்: 7,74,619
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 136
Also Read:Ramanathapuram Election Results 2024 : ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்வு முடிவுகள்