5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Deworming Day: குடற்புழு நீக்க நாள்.. மாணவர்களுக்கு மாத்திரை கொடுத்து விழிப்புணர்வு..

1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் இந்த குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவாமல் சாப்பிடுதல், கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடுதல், திறந்த வெளியில் மலம் கழித்தல், சுத்தம் பேணாமல் இருத்தல் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கு குடற்புழுக்கள் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

Deworming Day: குடற்புழு நீக்க நாள்.. மாணவர்களுக்கு மாத்திரை கொடுத்து விழிப்புணர்வு..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Aug 2024 21:36 PM

தேசிய குடற்புழு நீக்க தினம்: தேசிய குடற்புழு தினத்தை ஒட்டி தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை செனாய் நகரில் இருக்கும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பின்னர் குடற்புழு தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதனை தொடர்ந்து அங்கு இருக்கும் மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டது. 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் இந்த குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவாமல் சாப்பிடுதல், கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடுதல், திறந்த வெளியில் மலம் கழித்தல், சுத்தம் பேணாமல் இருத்தல் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கு குடற்புழுக்கள் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் படிக்க: பெண் காவலர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. ஓராண்டு மகப்பேறு விடுப்பு.. சொந்த ஊருக்கு பணியிட மாற்றம்..!

இது தொடர்பான விழிப்புணர்வு ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், “ அல்பன்டோசல் என்று சொல்லக்கூடிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது 2010 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 21 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தற்போது இந்த திட்டம் மாணவர்கள் மட்டுமல்லாமல் 20 லிருந்து 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் தரக்கூடிய அளவில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு வந்தார்கள்.

மேலும் படிக்க: ராயன் முதல் கல்கி வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்!

அடுத்ததாக 2015ஆம் ஆண்டு இந்தியா முழுவதிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்ற வகையில் இத்திட்டம் இந்தியா முழுமைக்கும் பரவியிருக்கின்றது. எனவே குடற்புழு நீக்க மாத்திரைகள் தமிழ்நாடு முழுவதிலும் 1 முதல் 19 வயதிற்குட்ட மாணவிகளுக்கு அல்பண்டசோல் மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் இத்திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

இது தேசிய அளவிலான திட்டம் என்பதால் WHO மற்றும் ICMR ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு மையக்கரு வைத்திருப்பார்கள். எனவே இந்த வருடத்திற்கான மையக்கருத்து, “குடற்புழு தொற்றை நீக்குவோம், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்”என்பது. உலக மக்கள் தொகையில் 24% மக்கள் மண் மூலம் பரவக்கூடிய குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News