நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் ரத்து… தேசிய முகமை மறு தேர்வு நடத்த முடிவு..!

நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது 1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் ரத்து... தேசிய முகமை மறு தேர்வு நடத்த முடிவு..!

நீட் தேர்வு ரத்து

Updated On: 

13 Jun 2024 20:16 PM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு 4,750 மையங்களில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியான நிலையில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து.. 7 தமிழர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு.. விசாரணை தீவிரம்

720 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் தேர்வை 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்த தேர்வில் நெகட்டிவ் மார்க் மிகப்பெரிய ரோல் வகிக்கும் சூழலில், நிறைய மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கேள்விக்கு தவறாக பதிலளித்தால், 5 மதிப்பெண்கள் ஏற்கனவே பெற்ற மதிப்பெண்களில் குறைக்கப்படும். நிறைய பேருக்கும், இதே மாதிரியான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை, “தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் நேரம் வீணானால், அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தை மேற்கோள் காட்டி, மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு வரும் 23 ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Also Read: Manjummel Boys: ’மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவிற்கு வந்த புதிய சிக்கல்…!

நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டிய மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமைக்கு வழக்கு தொடர்ந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் கடந்த ஜூன் 1-ம் தேதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா அமர்வின் விசாரணையில், நீட் தேர்வு நடைபெற்ற சில மையங்களில் தேர்வு நேரம் குறைவாக வழங்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதையடுத்து கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!