Rameswaram: இது லிஸ்டுலேயே இல்லையே.. ராமேஸ்வரத்தில் ஆன்மீக படகு சவாரி!
Tourism: முதல் கட்டமாக ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் இயக்கப்படும் என்றும், இரண்டாம் கட்டமாக உள்ளூர் சுற்றுலா தலங்கலான அக்னி தீர்த்தம், வில்லுண்டி தீர்த்தம், பாம்பன் குந்துக்கால் துறைமுகம், தனுஷ்கோடி, குருசடை தீவு உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்க்க பார்வையிடும் வகையில் ஆன்மீக படகு சவாரி துவங்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் தீவில் விரைவில் ஆன்மீக படகு சவாரி அமைப்பதற்கான திட்டம் உள்ளதாக தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமைச் செயல் அலுவலர் வள்ளலார் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமேஸ்வரம் தீவில் தமிழ்நாடு கடல் சார்ந்த செயலாளர் வள்ளலார் தலைமையிலான குழுவினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கடல்சார் வாரியத் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் கப்பல் சேவை மற்றும் சுற்றுலா படகு சவாரி தொடங்குவதற்கு பொருத்தமான இடங்கள் குறித்து அந்த குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் ஐஐடி குழு மணல் ஆய்வு செய்த பகுதிகளிலும், தங்கச்சிமடம், வில்லுண்டி தீர்த்தம், பாம்பன் குந்துங்கால் துறைமுகம். தனுஷ்கோடியின் பாக்ஜலசந்தி கடற்கரை உள்ளிட்ட இடங்களையும் இந்த குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Also Read: Karur: காணாமல் போன அர்ச்சகரின் மனைவி.. பத்திரமாக மீட்டு கொடுத்த இஸ்லாமிய தம்பதி!
இதன் பின்னர் செய்தியாளர்களை தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணை தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சந்தித்தனர். அப்போது பேசிய தலைமைச் செயல் அலுவலரான வள்ளலார், “விரைவில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தொழில் மற்றும் கடல் வளம் பாதுகாப்பு ஏற்றவாறு இந்த கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமையும்” என தெரிவித்தார்.
மேலும் முதல் கட்டமாக ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் இயக்கப்படும் என்றும், இரண்டாம் கட்டமாக உள்ளூர் சுற்றுலா தலங்கலான அக்னி தீர்த்தம், வில்லுண்டி தீர்த்தம், பாம்பன் குந்துக்கால் துறைமுகம், தனுஷ்கோடி, குருசடை தீவு உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்க்க பார்வையிடும் வகையில் ஆன்மீக படகு சவாரி துவங்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
Also Read: Traffic Diversion: மெட்ரோ பணிகள்.. சென்னை தி.நகரில் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்!
தீவிரமாக நடைபெறும் பணிகள்
கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தான் தமிழ்நாடு அரசு சார்பில் இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே குறைந்த தூர பயணிகள் செல்லும் வகையில் கப்பல் போக்குவரத்தை தொடங்க ராமேஸ்வரம்-தலைமன்னார், ராமேஸ்வரம் – யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் கப்பல்களை இயக்குவதற்கு ராமேஸ்வரத்தில் கப்பல் அணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடியுரிமை பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை கட்டுவதற்கு தேவையான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் ஆகியவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் தீவு
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள ஒரு நகரம் தான் ராமேஸ்வரம் ஆகும். இலங்கையின் மன்னார் தீவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இணைப்பு பாலமாக இருக்கும் ராமேஸ்வரம் கடல் பகுதி ஆன்மீக பூமியாக திகழ்கிறது. ராமர் இலங்கையில் இருந்து தனது மனைவி சீதை மீட்க இங்கு இருந்து தான் பாலம் அமைத்ததாக இன்றளவும் நம்பப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் உள்ள கடல் அக்னி தீர்த்த கடல் என அழைக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினால் அவர்களின் கர்ம வினைகள் அனைத்தும் தீரும் என நம்பப்படுகிறது. மேலும் தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, கோதண்டராமர் கோயில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ளது. மேலும் ராமேஸ்வரத்தில் கோயில் கொண்டுள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் இருக்கும் தீர்த்த கிணற்றில் நீராடினால் தீராத நோய்களும் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இப்படி பல சிறப்புகளை கொண்ட அங்கு ஆன்மிக படகு சவாரி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.