5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Madurai: மேம்பாலம் கட்டும் பணி.. மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ச்சியாக பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தற்காலிகமாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு சாலை இரு பக்கமும் வாகனங்கள் செல்லும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Madurai: மேம்பாலம் கட்டும் பணி.. மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Nov 2024 08:44 AM

போக்குவரத்து மாற்றம்: மதுரையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் முக்கிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களுடைய பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு இடங்களிலும் மேம்பாலம் கட்டும் திட்டம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகர பகுதியில் சிவகங்கை சாலை மேலமடை சந்திப்பில் மேம்பால கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக அப்பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.

Also Read: Karur: காணாமல் போன அர்ச்சகரின் மனைவி.. பத்திரமாக மீட்டு கொடுத்த இஸ்லாமிய தம்பதி!

செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

  • அதன்படி பி.சி.பெருங்காயம் சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேலமடை சந்திப்பு நோக்கி வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாட்டுத்தாவணி அல்லது விரகனூர் சுற்றுச்சாலை வழியாக சென்று மதுரை மாநகருக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பி.சி.பெருங்காயம் சந்திப்பில் இருந்து மேலமடை வழியாக மதுரை மாநகரக்குள் வரும் அனைத்து வாகனங்களும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வண்டியூர் மக்கள் மற்றும் உள்ளூர் கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் ஆகிய அனைத்தும் கோமதிபுரம் 6வது தெரு வழியாக செல்ல வேண்டும்.
  • ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த தெருவை தாண்யுள்ள மேலமடை சிக்னலுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காய்கறி மார்க்கெட்டில் இருந்து  செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேலமடை மற்றும் சுகுணா ஸ்டோர் வழியாக தெப்பக்குளம் விரகனூர் ஆற்றுப்படுகை ரோடு வழியாக செல்ல வேண்டும்.
  • இதே போல் பிசி பெருங்காயம் சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மற்றும் ஆவின் சந்திப்பில் இருந்த வரும் அனைத்து வாகனங்களும் மேலமடை சந்திப்பு வரை வந்து இடதுபுறம் திரும்பி காய்கறி மார்க்கெட் வழியாக மாட்டுத்தாவணிக்கு செல்லலாம்.
  • அதேபோல் வலது புறம் திரும்பி சுகுணா ஸ்டோர், தெப்பக்குளம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலைக்கு செல்லலாம். இந்தப் போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • அது மட்டுமல்லாமல் மதுரை மாநகரக்குள் செல்லும் வகையிலான இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (நவம்பர் 24) சோதனை முறையிலும், வரும் நவம்பர் 26ம் தேதி முதல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த போக்குவரத்து மாற்றத்திற்காக அண்ணா நகரில் இருந்து வண்டியூர் ரிங் ரோடு செல்லும் பாதையும் அதற்கு இணையாக உள்ள வைகை வடக்கு கரையில் செல்லும் ரோடும் சீரமைக்கப்பட்டுள்ளது.

Also Read:Traffic Diversion: மெட்ரோ பணிகள்.. சென்னை தி.நகரில் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்!

விரைந்து முடிக்க கோரிக்கை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ச்சியாக பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தற்காலிகமாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு சாலை இரு பக்கமும் வாகனங்கள் செல்லும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இப்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் சாலைகள் சேரும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நெடுஞ்சாலை துறை இதில் கவனம் மேற்கொண்டு மழைநீர் தேங்கா வண்ணம் சர்வீஸ் சாலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைபோல் சென்னையில் மெட்ரோ பணிகள் காரணமாக தொடர்ச்சியாக போக்குவரத்து மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (நவம்பர் 24) முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பான பனகல் பார்க் பகுதியில் உள்ள வெங்கட்நாராயணா சாலையில் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News