5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Traffic Changes: வாகன ஓட்டிகளே..சென்னை தி.நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!

போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை தியாகராய நகரில் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதில் பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் பகுதிக்கான கட்டுமான பணிகள் வெங்கட் நாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள […]

Traffic Changes: வாகன ஓட்டிகளே..சென்னை தி.நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 25 Nov 2024 06:25 AM

போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை தியாகராய நகரில் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதில் பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் பகுதிக்கான கட்டுமான பணிகள் வெங்கட் நாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜேஒய்எம் திருமண மண்டபம் அருகில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னையில் மின்சார ரயில் ரத்து.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா?

அதன்படி தியாகராய சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சிவஞானம் தெரு வழியாக வெங்கட்நாராயண சாலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக வெங்கட் நாராயண சாலையை அடைந்து தங்கள் இலக்கை நோக்கி பயணிக்கலாம். அதேபோல் உள்ளூர் மக்கள் வசதிக்காக தியாகராய சாலையில் இருந்து சிவஞானத் தெரு வழியாக ஜேஒய்எம் கல்யாண மண்டபம் வரை வாகன ஓட்டிகள் இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த இந்தத் திட்டத்திற்கு வாகன ஓட்டுனர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நடைபெறும் பணிகள்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. பேருந்து, ரயில், கப்பல், விமானம் என 4 வகையான போக்குவரத்தும் உள்ள இடமாக சென்னை திகழ்கிறது. மக்கள் தங்கள் பயணங்களை எளிதாக செல்லும் பொருட்டு ஆங்காங்கே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க சென்னையின் முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக மெட்ரோ ரயில்கள் திகழ்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் நிறைவடைந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அதன் தேவை அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும், பரங்கிமலை முதல் விம்கோ நகர் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. சிக்னல் கோளாறு தவிர்த்து எந்தவித பிரச்சினைக்காகவும் மெட்ரோ ரயில்கள் இயங்காமல் இதுவரை இருந்ததில்லை.

சென்னையை பல புயல்கள் தாக்கிய நிலையில் மெட்ரோ ரயில் சேவை மட்டும் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு பயணிகளுக்கு கை கொடுத்தது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயணப்பட்டு வருகின்றனர். சரியான நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலான மக்களின் தேர்வாக மெட்ரோ ரயில்கள் மாறிவிட்டது. இதனால் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அலுவலகம் சென்று வீடு திரும்பவோர், கல்வி நிலையங்களுக்கு சொல்வோர், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்வோர் என நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணப்பட்டு வருகின்றனர்.

Also Read: எம்.ஜி.ஆர் குறித்து அன்றே கணித்தார் ஜானகி… நூற்றாண்டு விழாவில் ரஜினி சொன்ன சுவாரஸ்ய தகவல்!

கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 90 லட்சம் மக்கள் பயணப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. பயணிகள் வசதிக்காக மற்றும் டிக்கெட் எடுக்கும் காத்திருப்பை குறைப்பதற்காக மெட்ரோ அட்டை, வாட்ஸ்அப் மற்றும் பண பரிவர்த்தனை செயலி மூலம் டிக்கெட் பெறுவது, அவ்வாறு பெறும் போது சலுகை தருவது, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களை சில நிமிட இடைவெளியில் இயக்குவது என அனைத்து வகையிலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News