Crime: அமைச்சருக்கு மிரட்டல்.. நைட்டி அணிந்துகொண்டு வாக்குவாதம்.. போலீசாரை அலறவிட்ட போதை நபர்!
சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட பிறகு அதனை நல்லவிதமாகவும், கெட்ட விதமாகவும் பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் தவறுகளை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் பேஸ்புக் நேரலையில் தோன்றிய நபர் காவல் ஆணையர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரையும் அவதூறாக பேசிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரையை இந்த நபர் தலைசுற்ற வைக்கும் அளவுக்கு ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம். சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட பிறகு அதனை நல்லவிதமாகவும், கெட்ட விதமாகவும் பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் தவறுகளை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தனி மனித தாக்குதல் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் பதிவுகள் என அனைத்தும் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read: கேரளாவில் கார்- பஸ் நேருக்கு நேர் மோதல்.. 5 மருத்துவ மாணவர்கள் மரணம்
பேஸ்புக் நேரலையில் கஞ்சா
இப்படியான நிலையில், பேஸ்புக் நேரலையில் தோன்றிய ஒரு நபர் திடீரென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல் ஆணையர், அமைச்சர்கள் என அனைவரையும் சரமாரியாக விமர்சித்து தள்ளினார். மேலும் நேரலையில் கஞ்சா பற்ற வைத்து புகைத்ததோடு மட்டுமல்லாமல் அண்ணாநகரில் தன்னை யாராவது நெருங்கி வந்தால் வெடிகுண்டுகள் வீட்டில் வைத்திருப்பதாகவும் அவை அனைத்தும் வெடித்து சிதறும் என அச்சுறுத்தல் விடுக்கும்படி பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பந்தப்பட்ட பேஸ்புக் கணக்கில் இணைக்கப்பட்டிருந்த செல்ஃபோன் எண்ணை வைத்து அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாநகர் பகுதியில் உள்ள லோட்டஸ் காலனியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் அந்த செல்போன் எண்ணுக்கான சிக்னல் காண்பித்துள்ளது.
அதனைக் கொண்டு உடனடியாக அண்ணா நகர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்தனர். மேலும் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிப் பார்த்து விசாரிக்க ஆரம்பித்தனர். அதற்குள் போலீசார் காலனிக்குள் வந்த விஷயம் அந்த நபருக்கு தெரிந்துள்ளது. இப்படியான நிலையில் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டின் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக அது திறக்கப்படாமல் இருந்துள்ளது.
Also Read: Crime: இன்ஸ்டாகிராம் மூலம் தங்கையுடன் காதல்.. இளைஞரை கொலை செய்த சகோதரர்!
போலீசுக்கு ஆட்டம் காட்டிய கங்கை அமரன்
அது மட்டுமல்லாமல் உள்ளே இருந்த நபர் கதவை திறக்காமல் பாக்ஸிங் கிளவுஸ் ஒன்றைப் போட்டுக் கொண்டு வெளிப்புற ஜன்னல் கண்ணாடியை உடைத்தான். மேலும் ஜன்னலில் உட்கார்ந்துக் கொண்டு தொடர்ச்சியாக போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளான்.
இதனை தொடர்ந்து திடீரென வீட்டுக்குள் சென்ற நபர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து மீண்டும் ஜன்னலில் அமர்ந்து கொண்டான். அப்போது அவன் நைட்டி அணிந்து வந்து மீண்டும் மிரட்டும் வகையில் பேச தொடங்கினான். இதற்கிடையில் தீயணைப்பு துறையினர் ஏணி மூலமாக ஏறி அவரை பிடிக்கும் என முயற்சியில் இறங்கினர். ஆனால் அவர்களிடம் இருந்து அந்த நபர் தப்பிக்க முயற்சிக்கையில் கீழே விழுந்தான்.
உடனடியாக அந்த நபரை போலீசார் கைது செய்தனர். கைதான பின்னரும் அந்த நபர் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவர் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு மர்ம பொருளை தடவியல் துறையினருக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அண்ணாநகரை சேர்ந்த கங்கை அமரன் என தெரியவந்தது.
இவர் ஓட்டேரியைச் சேர்ந்த ரவுடி ஒருவரிடம் அசோசியேட் ஆக இருந்து வந்ததும், பல நபர்களை நைட்டி அமரன் பாய் என மிரட்டி மாமூல் வாங்கியதும் தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் பெண்களிடமும் பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா போதையில் தொடர்ச்சியாக இது போன்ற ஆபாசமாக பேசி மிரட்டல் விடுப்பதை கங்கை அமரன் வழக்கமாக வைத்திருந்தது தெரிய வந்தது.
பொது மக்கள் அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா போதையில் இதுபோன்று தவறாக பேசிவிட்டதாக கூறியுள்ளார். போலீசார் கைது செய்யும் போது அளவுக்கு அதிகமாக கஞ்சா போதையில் இருந்ததால் அந்த நபர் கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.