Social Media: திடீரென செயல்படாமல் போன சமூக வலைத்தளங்கள்.. என்னதான் பிரச்னை?
ஸ்மார்ட் போன்கள் வந்து விட்ட பிறகுதான் இவற்றின் வளர்ச்சி என்பது மிகப்பெரிய அளவில் எட்டியுள்ளது. இத்தகைய சமூக வலைதளங்களில் மூலம் நாம் இருக்கிற இடத்திலிருந்து உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்பு கொண்டு பேச முடியும். இதனால் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் சமூக வலைத்தள பக்கங்கள் நேற்றிரவு திடீரென முடங்கியதால் பயனாளர்கள் மிகப்பெரிய அளவில் அவதியடைந்தனர். சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி என்பது கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பிறந்த குழந்தைகள் தொடங்கி முதிய வயதினர் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களுக்கு என தனியாக கணக்குகள் தொடங்கி பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் அவர்கள் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி அவர்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவிட்டு வருகிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்அப் என பல சமூக வலைத்தளங்கள் உள்ள நிலையில் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக் கொண்டு பயனாளர்களுக்கு அப்டேட் வழங்குவதோடு மட்டுமல்லாமல் தனித்துவமான உபயோகத்திற்கும் உதவுகிறது.
ஸ்மார்ட் போன்கள் வந்து விட்ட பிறகுதான் இவற்றின் வளர்ச்சி என்பது மிகப்பெரிய அளவில் எட்டியுள்ளது. இத்தகைய சமூக வலைதளங்களில் மூலம் நாம் இருக்கிற இடத்திலிருந்து உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்பு கொண்டு பேச முடியும். இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சமூக வலைதளங்களில் குற்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது.
Thanks for bearing with us! We’re 99% of the way there – just doing some last checks. We apologize to those who’ve been affected by the outage.
— Meta (@Meta) December 11, 2024
குறிப்பாக குழந்தைகள், பெண்கள் விஷயத்தில் கண்காணிப்பு அதிகமாகி வருகிறது. இந்த சமூக வலைத்தளங்கள் அவ்வப்போது சர்வர் பிரச்சினை காரணமாக முடங்கிவிடும். இது குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் முடங்குவதால் பெருமளவு பயனாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனம் பாதிப்பை சரி செய்தாலும் நிலைமை முழுவதுமாக சரியாவதாக தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சமூக வலைத்தளப் பக்கங்கள் அனைத்தும் முடங்கின. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை முடங்கியதால் பயனளர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் போட்டோ மற்றும் வீடியோ பதிவிடுவதில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை தொழில் ரீதியாக பயன்படுத்துபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். அதேசமயம் இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை அதன் உள்ளே புதிய செய்திகள் எதுவும் வராமல் பழைய கடைசியாக பார்த்த பதிவுகள் மட்டுமே காட்டியதால் பலரும் பொறுமையிழந்தனர்.
இதனை தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கத்தில் instagramdown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்த பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களும் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் நடந்த பிரச்சனைகளுக்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
நள்ளிரவு எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “சில பயனாளர்கள் தொழில்நுட்பப் பிரச்சினைகளால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர் இதனை நாங்கள் அறிந்து கொண்டு முடிந்தவரை பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்து வருகிறோம் தற்போது ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து 4மணி நேரம் கழித்து பிரச்னை 99 சதவிகிதம் சரிசெய்யப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கம் கொடுத்திருந்தது. ஆனாலு, கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் அடிக்கடி இதுபோன்ற பிரச்னை சந்திப்பது ஏற்புடையது அல்ல என பலரும் தெரிவித்துள்ளனர். சர்வர் பிரச்னை ஏற்படுவதை தீர்க்க கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு: Tamil Breaking News Live: ரஜினி பிறந்தநாள்.. தலைவர்கள் வாழ்த்து.. இன்றைய செய்திகள் உடனுக்குடன்!