5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Seenu Ramasamy: விவாகரத்தை அறிவித்த சீனு ராமசாமி.. தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி!

மண் சார்ந்த கதைகளை இயக்கும் இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்த இவர் இரண்டாவதாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தை எடுத்தார். இந்தப் படம் தேசிய விருது பெற்ற நிலையில் சீனு ராமசாமி கவனிக்கத்தக்க மனிதராக தமிழ் சினிமாவில் மாறினார்.

Seenu Ramasamy: விவாகரத்தை அறிவித்த சீனு ராமசாமி.. தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி!
சீனு ராமசாமி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 12 Dec 2024 11:34 AM

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக சமூக வலைத்தளம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியான பரத் நடித்த கூடல் நகர் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. மண் சார்ந்த கதைகளை இயக்கும் இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்த இவர் இரண்டாவதாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தை எடுத்தார். இந்தப் படம் தேசிய விருது பெற்ற நிலையில் சீனு ராமசாமி கவனிக்கத்தக்க மனிதராக தமிழ் சினிமாவில் மாறினார். இதன்பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லத்துரை என 2 வருடங்களுக்கு ஒருமுறை படம் இயக்கி வரும் சீனு ராமசாமி தன்னுடைய படங்களில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இதனிடையே சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “அன்பானவர்களுக்கு வணக்கம் எனது மனைவி தர்ஷனாவும் நானும் 17 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்பத்துடன் விவாகரத்து பெற்று அவர்களுக்கான பாதையில் பயணிக்க உள்ளோம். தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எந்த விதத்திலும் சேராது மற்றும் பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.  இந்த பிரிவுக்கு உதவுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளோம்.  இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கு அதன் உரிமைகளுக்கும் மதிப்பளிக்குமாறு தெரிவித்து தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கமாக அமையட்டும்” என  சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Also Read: சிவா நடித்த சூது கவ்வும் 2 படத்தின் ’வி ஆர் நாட் சேம்’ பாடல்!

தொடரும் தமிழ் சினிமாவின் தம்பதிகள் விவாகரத்தால் 2024 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார், ஏ.ஆர்.ரஹ்மான் வரிசையில் தற்போது சீனு ராமசாமியும் நடப்பாண்டில் இணைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

ராமசாமி சினிமா வாழ்க்கை

சீனு ராமசாமி மண் சார்ந்த கதைகளை திரைப்படமாக எடுப்பதில் வல்லவர். அவரின் தென்மேற்கு பருவக்காற்றும், நீர்ப்பறவை படமும் காலத்திற்கும் அவர் பெயர் சொல்லும் அழகிய காவியங்களாக உள்ளது என ரசிகர்களை பல தருணங்களில் பாராட்டியுள்ளனர். இப்படியான நிலையில் சீனு ராமசாமி மீது கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டு ஒன்று முன் வைக்கப்பட்டது. அதில் வழக்கு எண் 18/9, த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை மனிஷா யாதவ் சீனு ராமசாமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

Also Read: Rajinikanth Birthday Special: தமிழ் சினிமாவின் பிராண்ட்.. சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து வந்த பாதை!

சீனு ராமசாமி விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷாலினை வைத்து இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் இதுவரை வெளியாகாத நிலையில் இதில் ஹீரோயின்களாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அட்டக்கத்தி நந்திதா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். ஆனால் இந்த இரு கேரக்டர்களில் ஒரு கேரக்டருக்கு நடிகை மனிஷா யாதவ் தான் சீனு ராமசாமியின் முதல் தேர்வாக இருந்தது.

ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் அந்த படத்தில் இருந்து  தான் விலகி விட்டதாக மனிஷா யாதவ் தெரிவித்திருந்தார். சினிமா தொடர்பான விஷயங்களை பேசும் யூட்யூப் சேனல் ஒன்றில் இந்த பாலியல் தொல்லை குறித்த விவரங்கள் அனைத்தும் முதலில் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் சீனு ராமசாமி கடுமையாக மறுத்தார். ஆனால் நடிகை மனிஷா யாதவ் பாலியல் தொல்லை விஷயத்தை உறுதி செய்த நிலையில் மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனை முடிந்து சரியாக ஒரு வருடத்தில் சில ராமசாமி தனது விவாகரத்தை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு: Tamil Breaking News Live: ரஜினி பிறந்தநாள்.. தலைவர்கள் வாழ்த்து.. இன்றைய செய்திகள் உடனுக்குடன்!

Latest News