02 DEC 2024

பலாப்பழ கொட்டையில் இத்தனை நன்மைகளா?

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

சத்துக்கள்

பலாப்பழ விதைகளில் புரதங்கள், நார்ச்சத்து, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளன.

செரிமானம்

பலாப்பழ விதையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்க இது உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

பலாப்பழ விதையில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான தாதுக்கள்.

புற்றுநோய்

பலாப்பழ விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

உடல் எடை

உடல் எடையை குறைக்க பலாப்பழ விதைகளை உட்கொள்வது நல்ல பலனைத் தரும். ஏனெனில் பலாப்பழ விதையில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.

நார்ச்சத்து

பலாப்பழ விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.