5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 21 October 2024: இன்றைய முக்கிய நிகழ்வுகள்.. டாப் 10 செய்திகள் உங்களுக்காக!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மட்டுமல்லாமல், வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை வழங்குகிறோம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 21 October 2024: இன்றைய முக்கிய நிகழ்வுகள்.. டாப் 10 செய்திகள் உங்களுக்காக!
இன்றைய முக்கியச் செய்திகள்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 21 Oct 2024 20:25 PM

இன்றைய முக்கிய நிகழ்வுகள்: அக்டோபர் 21 ஆம் தேதியான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம். இதில் உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கும்.

தமிழ்நாடு 

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர். டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகியோருக்கு அதிகபட்சமாக 16,800 வரை தீபாவளி போனஸ் கிடைக்கப்பெறும். விரிவாக படிக்க
  • பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 22) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கரூர், தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • நேற்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். விரிவாக படிக்க
  • திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைத்தார்.  விரிவாக படிக்க
  • தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் பாதுகாப்பாக பயணிக்கவும் கூடுதலாக சுமார் 14,080 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த சிறப்பு பேருந்துகள் எந்த தேதி முதல் இயக்கப்பட உள்ளன விரிவாக படிக்க
  • தஞ்சாவூரில் சென்னை பள்ளிக்கரணை சேர்ந்த தொழிலதிபரிடம் வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் என்பவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் புதுக்கோட்டை வந்துள்ளார். மீண்டும் சென்னை திரும்பிய அவர் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வளம்பக்குடி என்ற பகுதியில் இயற்கை உபாதைக்காக காரை நிறுத்தியுள்ளார். விரிவாக படிக்க

இந்தியா

  •  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் உச்சக்கட்ட பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. அங்குள்ள கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் பகுதியில் தான் நேற்று (அக்டோபர் 20) மாலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு மருத்துவர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 6 பேர் என மொத்தம் 7 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவாக படிக்க
  • ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பத்வேலு என்ற பகுதியில் 16 வயது சிறுமி மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் விக்னேஷ் என்ற நபர் திட்டமிட்டு ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. விரிவாக படிக்க
  • ஆந்திராவில் குழந்தைகள் பிறப்பு சதவிகிதம் குறைந்து வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ள யோசனை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அமராவதி தலைநகர் கட்டுமானப் பணிகளின் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் மக்கள் தொகை பெருக்கத்தின் அவசியம் குறித்து சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்தார். அதாவது நாட்டின் நிலைமையைப் பார்த்தால் வரும் நாட்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் சதவீதம் குறையும் அபாயம் உள்ளது என கூறினார். விரிவாக படிக்க

உலகம்

  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க அதிபராக தற்போது ஜோ பைடன் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமஹா ஹாரிஸூம் களமிறங்கியுள்ளனர். விரிவாக படிக்க

விளையாட்டு

  • ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. 9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. விரிவாக படிக்க

Latest News